பல கோடி மதிப்புள்ள சொகுசு காரை விட்டுவிட்டு ஆட்டோவில் சென்ற பிரபல நடிகை - வைரலாகும் புகைப்படங்கள்


சினிமா பிரபலங்கள் யாரும் ஆட்டோவில் செல்வதை பார்க்க முடியாது. ஆளாளுக்கு தனித்தனியாக சொகுசு கார்களை வைத்திருப்பார்கள். ஆனால், பிரபல பாலிவுட் நடிகை மலைக்கா அரோரா தனது பெற்றோருடன் ஆட்டோவில்பயணம் செய்து ரசிகர்களை வியக்க வைத்துள்ளார்.

பொதுவாக சினிமாத்துறையில் முன்னணி பிரபலங்கள் பலரும் பொது வெளியில் வரவே யோசிப்பார்கள். அப்படி வந்தாலும் காரில் தான் வருவார்கள். காரில் வந்தாலும் சிலர் பாதுகாப்புக்கு ஆட்களுடன் தான் வருவார்கள். 

ஆனால், நடிகை மலைக்கா அரோரா தன்னுடைய விலையுயர்ந்த காரை விட்டுவிட்டு ஒரு ஆட்டோவில் ஏறி சென்றுள்ளார். அவரோடு அவரது பெற்றோரும் உள்ளனர். 


இந்த புகைப்படங்கள் தான் தற்போது இணையத்தில் வைரலாகியுள்ளன. தற்போது 46 வயதாகும் இந்த நடிகை விரைவில் இரண்டாவது திருமணம் செய்யவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. தயாரிப்பாளர் போனி கபூரின் மகன் அர்ஜுன் கபூரை தான் அவர் மணக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.


Blogger இயக்குவது.