முதல் படமே இப்படியா..? - பரிதாபமான நிலையில் துருவ் விக்ரம்


நடிகர் சியான் விக்ரமின் மகன் துருவ் விக்ரம் ஹீரோவாக சினிமாவில் அறிமுகமாகிறார் என்ற செய்தி தமிழக சினிமா ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. 

இயக்குனர் பாலாவுடன் முதல் படம். வாவ் சூப்பர் என்றனர் ரசிகர்கள். அதிலும், தெலுங்கில் வெளியாகி ப்ளாக்பஸ்டர் ஹிட் அடித்த அர்ஜுன் ரெட்டி படத்தின் ரீமேக் என்றனர். அடி தூள்.. வெல்கம் குட்டி சியான் என்றனர்.

வர்மா என்ற தலைப்பில் படம் ஆரம்பிக்கபட்டது. ஆனால், படம் முடிவதற்கு போதையில் கார் ஒட்டிய கேஸ் ஒன்றில் துருவ் விக்ரம் மீது ஒரு கரும்புள்ளி விழுந்தது. சரி, வயசு பசங்க அப்படிதான் இருப்பாங்க என்று விட்டு விட்டனர். அதன் பிறகு முதல் படமான "வர்மா" ட்ராப் ஆகிப்போனது.

படம் எடுத்து  முடித்த பிறகு படத்தில் காட்சிகள் சரியில்லை. அது சரியில்லை. இது சரியில்லை என மொத்த படத்தையும் தூக்கி குப்பையில் போட்டு விட்டார் நடிகர் விக்ரம். இதனால், பாலாவுக்கும் - விக்ரமுக்கும் மோதல் தொடங்கியது.

ஆனால், விக்ரம் "ஆதித்ய வர்மா" எனஅதேபடத்தை ரீ-ரீமேக் செய்தார். படம் வெளியாக தாமதமானது. பொதுவாக, பெரிய ஹீரோ படம் என்றாலும் குறிபிட்ட காலத்திற்கு மேல் தாமதம் ஆகி விட்டாலே படத்தின் மீது எதிர்பார்ப்பு குறைந்து விடும். துருவ் விக்ரமோ அறிமுக நாயகன்.. நிலைமை படுமோசமாகி விட்டது.

படத்தை ரீமேக் செய்யலாம்.. ஆனால், இவர் விஷயத்தில் ரீ-ரீமேக் ஆனது. ஒரு வழியாக படம் முடிந்து ரிலீசுக்கு தயாரானது. ஆனால், படம் ஆரம்பிக்கும் போது இருந்த அந்த கிரேஸ்.. எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் துளியும் இல்லை. 

இந்நிலையில், இந்த படம் வெளியாகி நல்ல ஒப்பனிங்கை பெற்றாலும் தொடர்ந்து ஓடுவதில் சறுக்கி விட்டது. படம் வெளியாகி ஐந்து நாள், ஒரு வாரம் என்ற நிலையிலேயே படத்தை தூக்கி கடாசி விட்டனர் திரையரங்கு உரிமையாளர்கள். 

இதனால், பரிதாபமான நிலையில் உள்ளார் துருவ் விக்ரம். அடுத்த படத்தையாவது, ரீமேக் செய்யாமல் நல்ல கதையாக தேர்ந்தெடுத்து நடித்தால் நலம் என்கிறார் சியான் விக்ரமின் நலம் விரும்பிகள். 
Blogger இயக்குவது.