மீண்டும் குத்து ரம்யா - ரசிகர்கள் ஷாக் ஆக்கிய படத்தின் டீசர்.!


கடந்த 2004-ஆம் ஆண்டு வெளியான குத்து படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமான திவ்யா ஸ்பந்தனா என்கிற ரம்யா, கன்னடம், தெலுங்கு, தமிழ் உள்பட 36 படங்களில் நடித்துள்ளார். 

2016-ஆம் ஆண்டு வெளியான 'நாகரஹாவு' இவரது கடைசி படமாகும். இடையில் 2012-ஆம் ஆண்டு காங்கிரஸ் இளைஞரணியில் சேர்ந்த ரம்யா, தனது 31-ஆவது வயதில் மாண்டியா தொகுதி இடைத் தேர்தலில் போட்டியிட்டு நாடாளுமன்ற உறுப்பினர் ஆனார். 

அதனை தொடர்ந்து 2014-ஆம் ஆண்டு மீண்டும் போட்டியிட்டபோது தோல்வியடைந்தார். காங்கிரஸ் சமூக வலைதள தலைவராக தேசிய அளவில் செயல்பட்டுவந்த ரம்யா, இரண்டாண்டுகளாக மாண்டியா தொகுதி பக்கமே தலைகாட்டாமல் இருந்து வந்தார்.

சமீபத்தில் பிரஜ்வால் தேவராஜூடன் இவர் நடித்துள்ள 'தில்கா ராஜா' என்ற கன்னட படத்தின் டீஸர் வெளியானது. இது, கர்நாடக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காரணம் அரசியலை விட்டு விலகி மீண்டும் சினிமாவில் நடிப்பதை குத்து ரம்யா யாருக்கும் தெரியப்படுத்தவில்லை. ஏன் ரசிகர்களுக்கு கூட இவர் படத்தில் மீண்டும் நடிப்பது தெரியாது.

படத்தின் டீசர் வெளியான பிறகுதான் இவர் மீண்டும் படத்தில் நடிக்கவுள்ளார் என்ற விஷயமே தெரிய வந்திருக்கின்றது.
Powered by Blogger.