மெரினா சந்திப்பு என்னாச்சு..? - திருமாவளவனுக்கு கேள்வி - காயத்ரி ரகுராமிற்கு குவியும் ஆதரவு..!


சமீபத்தில் இந்து கோவில்கள் பற்றி இழிவாக பேசிய விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவனை டுவிட்டரில் கடுமையாக விமர்சித்தார் பிரபல நடிகை காயத்ரி ரகுராம். 

காயாத்ரி ரகுராமின் இந்த பதிலடிக்கு ரசிகர்கள் மத்தியில் பாராட்டுகள் குவிந்தன. ஆனால், இதற்கு, விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். சென்னை, நுங்கம்பாக்கம், காம்தார் நகரில் உள்ள, காயத்ரி ரகுராமின் வீட்டை முற்றுகையிட்டு போராட்டம் கூட நடத்தினர்.

இதற்கு பதிலடியாக நவ., 27ல் மெரினா கடற்கரையில் என்னை நேருக்கு நேர் மிரட்ட தயாரா..? என திருமாவளவனுக்கு சவால் விட்டார் காயத்ரி ரகுராம். இதற்கிடையே தனது உயிருக்கு அச்சுறுத்தல் உள்ளதாக கூறி போலீஸ் பாதுகாப்பு கேட்டு கமிஷனரிடம் புகார் மனு அளித்தார் காயத்ரி. 

இந்நிலையில் சவால் தொடர்பாக பேஸ்புக்கில் மீண்டும் பதிவு செய்துள்ளார் காயத்ரி. அதில், "இன்றைய தினம் மெரினாவில் சந்திப்பு தொடர்பாக திருமாவளவனின் ஒப்புதலுக்காகக் காத்திருந்தேன். ஆனால், இந்த நிமிடம் வரை அவரிடமிருந்து எந்த தகவலும் இல்லை. இது, வி.சி.க., தொண்டர்களை ஏமாற்றும்படி ஆகிவிட்டது. இனி எந்த ஒரு எம்.பி.யோ அல்லது தலைவரோ ஜாதி, மதம் சார்ந்த பாகுபாடுகளை பார்க்க மாட்டார்கள் என நம்புகிறேன். உண்மையான தலைவர் அனைவரையும் சமமாகவே பார்ப்பர். நீங்கள் அனைவரும் உங்களின் வழக்கமான பணியை தொடரவும்" என பதிவிட்டுள்ளார். 

காயத்ரி ரகுராமின் இந்தபதிவிற்கும் ரசிகர்கள் ஆதரவு குவிந்து வருகின்றது.
Powered by Blogger.