பிகில் நஷ்டமா..? லாபமா.? - விநியோகஸ்தர் கூறிய தகவல்


நடிகர் விஜய்யின் பிகில் திரைப்படம் மிகப்பெரிய எதிர்ப்பார்ப்புக்கு இடையில் வெளியானது. 

படத்துக்கு ரசிகர்கள் பெரும் வரவேற்பு கொடுத்தாலும் கலவையான விமர்சனங்கள் தான் வந்துள்ளது. இந்நிலையில், படம் முதல் வார முடிவில் தமிழ்நாட்டில் மட்டும் ரூ. 100 கோடி வசூலித்துவிட்டதாக ரசிகர்கள் கொண்டாடி வந்தனர். 

இந்த நிலையில் பிகில் படத்தின் தமிழ்நாடு தியேட்டர் உரிமத்தை வாங்கிய "ஸ்க்ரீன் சீன் என்டர்டெயின்மென்ட்"-ன் உரிமையாளர் ஒரு பேட்டி கொடுத்துள்ளார். 

அவர் கூறுகையில், பிகில் திரைப்படம் தமிழ்நாட்டில் முதல் வார முடிவில் ரூ. 100 கோடி வசூலித்துள்ளது. இதன் மூலம் விநியோகஸ்தர்களுக்கு போதுமான லாபம் கொடுத்துள்ளதாக கூறியுள்ளார்.

அடுத்தடுத்த நாட்களில் வரும் வசூலை வைத்து தான் பிகில் லாபமா..? நஷ்டமா..? என்ற முடிவுக்கு வரமுடியும் என கூறுகிறார்கள் பாக்ஸ் ஆஃபிஸ் வட்டாரதினர்.
Powered by Blogger.