அப்பாவின் அந்த கனவை நிறைவேற்றி விட்டோம் - ஜெயம் ரவி, மோகன்ராஜா நெகிழ்ச்சியான பேச்சு
நடிகர் ஜெயம் ரவி, இயக்குனர் மோகன்ராஜா, அண்ணன், தம்பி இருவரும் அவரவர் துறையில் சிறப்பாக பயணித்து வருகின்றனர். சர்ச்சை, வம்பு, கிசுகிசு என எதிலும் சிக்காமல் சினிமாவில் பயணித்து வருபவர்கள் வெகுசிலர் மட்டுமே. அதில், இவர்களும் அடங்குவர்.
இவர்களுகடைய அப்பா பிரபல எடிட்டர் மோகன். அம்மா வரலட்சுமி மோகன். இருவரும் ஆளுக்கொரு புத்தகம் எழுதியுள்ளனர். ஆம், எடிட்டர் மோகன் "தனிமனிதன்", என்ற புத்தகத்தையும் அவரது மனைவி வரலட்சுமி
மோகன், "வேலியற்ற வேதம்" என்ற புத்தகத்தையும் எழுதியுள்ளனர். வருகிற டிசம்பர்
3ந் தேதி பிரமாண்ட விழாவில் இது வெளியிடப்படுகிறது.
இதுகுறித்து மோகன் ராஜாவும், ஜெயம்ரவியும் நிருபர்களுக்கு பேட்டி அளித்தனர். அதில் பேசிய ஜெயம் ரவி, ஒரு நடிகனாக , ஒரு இயக்குனராக வரவேண்டும் என்ற கனவுடன் சென்னைக்கு வந்தேன் என்று அப்பா அடிக்கடி கூறுவார்.
எங்கள் அப்பா கண்ட அந்த கனவை, நானும் , அண்ணனும் சேர்ந்து நிறைவேற்றியுள்ளோம். ரிலே ரேஸில் நாலு சுற்று ஓடினால் தான் வெற்றி கிடைக்கும். ஆனால் அந்த
நாலில் மூன்று சுற்றை அவரே கஷ்டப்பட்டு ஓடிவிட்டு. ஜெயிக்கிற இறுதிசுற்றை
மட்டும் தான் எங்களிடம் தந்துள்ளார். அதை நாங்கள் பொறுப்பாக செய்ய வேண்டும்
என்பது தான் எங்கள் ஆசை என்று உணர்ச்சி போங்க பேசினார்.
இயக்குனர் மோகன்ராஜா பேசுகையில், எனது குடும்பத்தின் முக்கிய நிகழ்வு. மிகுந்த மகிழ்ச்சியான மனநிலையில்
இருக்கிறேன். இருவரும் தங்களது வாழ்க்கை அனுபவங்களை புத்தகமாக
எழுதியிருக்கிறார்கள். நாங்கள் ஏன் எங்கள் அப்பாவை கொண்டாடுகிறோம் என்பதற்கு விடையாக அந்த புத்தகம் இருக்கும் என்று பேசியுள்ளார்.