சினிமாவை விட்டே போறேன் என்று கூறிய ரஜினிக்கு கமல்ஹாசன் கொடுத்த பதிலை பாருங்க..!
நடிகர் ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன் இருவரும் கடந்த 50 வருடங்களுக்கு மேலாக சினிமா உலகில் கொடி கட்டி பறந்து வருகிறார்கள். இதில், நடிகர் கமல்ஹாசன் கடந்த பத்து வருடங்களாக எடுத்த படங்கள் பல சர்ச்சைகளில் சிக்கின.
இதனை தொடர்ந்து படங்களில் நடிப்பதை விட்டுவிட்டு முழு நேர அரசியலுக்கு வந்து விட்டார். ஆனால், இப்போது அரசியலுக்கு உதவும் என்பதால் இந்தியன் 2 படத்தில் நடித்து வருகிறார்.
இப்போது, எப்படி அஜித்-விஜய் என ரசிகர்கள் இரண்டாக பிரிந்து சண்டை போட்டு வருகிறார்களோ..? அதே போல தான் ரஜினி-கமல் ரசிகர்களும் ஒரு காலத்தில் இரண்டாக பிரிந்து சண்டை போட்டு வந்திருகிறார்கள்.
இதனால் வெறுத்துப்போன நடிகர் ரஜினி, ஒரு கட்டத்தில் நான் சினிமாவை விட்டே போறேன் என்று கமல்ஹாசனிடம் கூற, அவரோ அப்படி எதுவும் செஞ்சி தொலைசிடாதிங்க.. நீங்க போயிட்டீங்கனா.. என்னையும் போக சொல்லுவாங்க.. எனக்கு சினிமா விட்டு போகும் யோசனையே இல்லை. ரசிகர்கள் அப்படிதான் இருப்பார்கள். கொஞ்ச நாளில் அவர்கள் வளர்ந்துவிடுவார்கள்.
நாம் தனியாக பேசும்போது ரசிகர்கள் சண்டை பற்றி என்ன பேசுவோம் என தெரிந்தால் அவர்கள் துடித்துப்போவார்கள். அதனால், சினிமாவை விட்டு போகிறேன் என்று இனிமேல் சொல்லாதிங்க என்று அட்வைஸ் செய்துள்ளார் ரஜினி.