ஜாங்கிரி மதுமிதாவின் "டிக்கிலோனா"..!


’ஒரு கல் ஒரு கண்ணாடி’ படத்தில் நடித்து பிரபலமானவர் நடிகை மதுமிதா. இந்த படத்தில் அவரை ஜாங்கிரி என்று சந்தானம் அழைப்பார். இதையடுத்து ஜாங்கிரி மதுமிதா என அழைக்கப்படுகிறார்.

தொடர்ந்து, ராஜா ராணி, இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா, ஜில்லா, காஷ்மோரா, விஸ்வாசம் உட்பட பல படங்களில் காமெடி வேடத்தில் நடித்துள்ளார். இவருக்கும் இவரது உறவினர் மோசஸ் ஜோயல் என்பவருக்கும் திருமணம் நடைபெற்றது.

பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்ட அவருக்கு மக்கள் மத்தியில் மேலும் ஆதரவு அதிகரித்தது.நிகழ்ச்சியில் இருந்து பாதியிலேயே வெளியேறிய போதும், பிக்பாஸ் வீட்டில் தமிழ்ப் பெண்கள், உடை கலாச்சாரம் என மதுமிதா நடந்து கொண்ட விதத்திற்கு சமூகவலைதளத்திலும் நல்ல ஆதரவு கிடைத்தது.

இந்நிலையில் சந்தானம் மூன்று வேடங்களில் நடிக்கும் ‛டிக்கிலோனா' படத்தில் அவர் வக்கிலாக நடித்து வருவது தெரிய வந்துள்ளது. மதுமிதா ஏற்கனவே சந்தானத்துடன் இணைந்து 'ஒரு கல் ஒரு கண்ணாடி' படத்தில் நடித்திருந்தார். 

இப்படம் மதுமிதாவிற்கு நல்ல பெயரை பெற்று தந்தது. அவரது பெயருடன் ஜாங்கிரி என்ற அடைமொழி இணைய அப்படமே காரணமாகவும் இருந்தது.தற்போது, மீண்டும் சந்தானத்துடன் கூட்டணி சேர்ந்துள்ளார் அம்மணி.

அட... த்தே...னட...!
Powered by Blogger.