"விஜய்யை யாராச்சும் விமர்சித்தால், அவர்களை கண்டிக்க முதல் ஆளா வருவேன்..!" - பிரபல நடிகர் அதிரடி பேச்சு..!
நடிகர் விஜய் நடிப்பிலும், இயக்குநர் அட்லி இயக்கத்திலும் உருவான படம் பிகில்.கடந்த அக்டோபர் மாதம் 25-ம் தேதி தீபாவளி விருந்தாக இந்த படம் வெளியானது.
தீபாவளிக்கு இரு நாட்களுக்கு முன் வெளியான இந்தப் படத்தில், விஜய் மற்றும் நயன்தாரா தவிர்த்து, ஆனந்த ராஜ், ஜாக்கி ஷெராப், யோகி ராஜ் உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர். வசூல் ரீதியாக படம் ஓ.கே என்றாலும், இந்தப் படத்துக்கு கலவையான விமர்சனங்கள் தான் கிடைத்தன.
இந்நிலையில்,இந்த படத்தில் நடிகர் விஜய்யுடன் பயணிக்கும் கதாபாத்திரமாக நடித்த நடிகர் ஆனந்த்ராஜ் சமீபத்திய பேட்டி ஒன்றில் இந்த படம் குறித்த தனது கருத்தை பதிவு செய்துள்ளார்.
பெண்கள் கால்பந்தாட்டத்தை மையப்படுத்தி எடுக்கப்பட்ட இந்தப்படம் மிகச் சிறப்பான படம் என்பதில் எள்ளவுக்கும் மாற்றுக் கருத்தில்லை. ராயப்பன் என்ற கேரக்டரில், நடிகர் விஜய், மிகச் சிறப்பாக நடித்திருக்கிறார். அவரைத் தவிர, வேறு யாரும் அந்தக் கேரக்டரில் இவ்வளவு சிறப்பாக நடித்திருக்க முடியாது.
பிகில் வெற்றிக்கு நடிகர் விஜய் மட்டும்தான் காரணம். ராயப்பன் கேரக்டராகவே அவர் வாழ்ந்திருக்கிறார். படத்தைப் பற்றி என்ன வேண்டுமானாலும் விமர்சனம் செய்யுங்கள். ஆனால் தனிமனித விமர்சனம் வேண்டாம். விஜய்யை யாரும் தனிப்பட்ட முறையில் விமர்சனம் செய்தால், அவர்களை கண்டிக்க முதல் ஆளாக வருவேன் என்று நடிகர் ஆனந்த ராஜ் கூறியிருக்கிறார்.