அப்பா இதை கைவிட வேண்டும் என்று தினமும் கடவுளை வேண்டினார் என் அம்மா..! - விக்ரம் மகன் துருவ் ஒப்பன் டாக்..!
அப்பா சினிமாவில் நடிக்க கூடாது என என் அம்மா தினமும் வேண்டினார் என்று விக்ரமின் மகன் துருவ் விக்ரம் கூறியுள்ளார். ஆதித்ய வர்மா என்ற படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமாகியுள்ளார் துருவ் விக்ரம்.
இந்த படம் தெலுங்கில் வெளியான அர்ஜுன் ரெட்டி என்ற படத்தின் ரீமேக் என்பது அனைவருக்கும் தெரியும். இந்த படத்தின் ரீமேக் உரிமையை வாங்கிய விக்ரம் அதனை இயக்குனர் பாலா-விடம் கொடுத்து படமாக "வர்மா" என்ற தலைப்பில் எடுக்க சொன்னார்.
ஆனால், பாலா எடுத்த படத்தில் திருப்தி இல்லாத காரணத்தினால், வேறு இயக்குனர் வைத்து ஆதித்ய வர்மா என்ற தலைப்பில் வேறு இயக்குனரை வைத்து எடுத்துள்ளார் விக்ரம். இந்நிலையில், இந்த படம் எந்த ஒரு பெரிய எதிர்பார்ப்பும் இன்றி இன்று வெளியாகியுள்ளது.
இந்த படத்தை ஆரம்பிக்கும் போது இருந்த அந்த கிரேஸ் மற்றும் எதிர்பார்ப்பு இப்போது சுத்தமாக இல்லை என்பதே உண்மை. இதற்கு, பாலா படம் ட்ராப் ஆனது, குடிபோதையில் போக்கு வரத்து போலீசாரிடம் சிக்கிய துருவ் விக்ரம் போன்றவை காரணம்.
இன்று படம் வெளியாகியுள்ள நிலையில், பிரபல பத்திரிகை ஒன்ரிறிற்கு பேட்டி அளித்த துருவ் விக்ரம் ''சேது படத்துக்கு முன்பாக என் அப்பா மிகவும் கஷ்டப்பட்டிருந்த சமயத்தில் அவர் சினிமாவைக் கைவிட வேண்டும் என்று என் அம்மா தினமும் பிரார்த்தனை செய்தார். பின்னாட்களில் 'சேது' படத்தையும் அதில் என் அப்பாவின் கடின உழைப்பையும் பார்த்த பிறகு, அவருக்கு இன்று வரை உறுதுணையாக இருந்து வருகிறார்", என துருவ் தெரிவித்துள்ளார்.