சூர்யா செய்வதை, விஜய் மற்றும் அஜித் செய்யவே மாட்டாங்க..! - பிரபல இயக்குனர் குற்றச்சாட்டு
நடிகர்கள் விஜய், அஜித் ஆகியோருக்கு இருக்கும் ரசிகர்கள் வட்டத்தை சொல்லித்தான் தெரிய வேண்டுமா என்ன..? தமிழ் சினிமாவின் இரு துருவங்கள் என இவர்களை சொல்லலாம். ஆனால், இவர்கள் மீது பிரபல இயக்குனர் ஒருவர் வைத்துள்ள குற்றச்சாட்டு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆம், வல்லமை தாராயோ என்ற படத்தை இயக்கியவர் இயக்குனர் "மதுமிதா" தான் அந்த குற்றசாட்டை வைத்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், முன்னணியில் இருக்கும் விஜய் மற்றும் அஜித் ஆகியோர் சூர்யா செய்வதை செய்ய மாட்டார்கள்.
சூர்யா பெண் இயக்குனர்களாக இருந்தாலும் அவர்கள் படத்தில் நடிக்கிறார். ஆனால், விஜய், அஜித்திடம் கதை சொல்ல போனாலே போதும் அவர்களது மேனேஜர்களே தடுத்து நிறுத்தி விடுகிறார்கள். சார், பெண் இயக்குனர்கள் இயக்கம் படத்தில் எல்லாம் நடிக்க மாட்டார் என்று கூறி அனுப்பி வருகின்றனர்.
நடிகர் சூர்யா இப்போது ஒரு பெண் இயக்குனரான "சுதா" இயக்கத்தில் சூரரை போற்று என்ற படத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடதக்கது.