நடிக்க வர்றதுக்கு முன்னாடி நம்ம லேடி சூப்பர் ஸ்டார் செய்த வேலையை பாருங்க - வைரலாகும் வீடியோ..!
நடிகை நயன்தாரா. இவருடைய இயற்பெயர் டயானா மரியா குரியன் என்பதாகும். தென்னிந்தியத் திரைப்பட நடிகை ஆவார். கடந்த 2003-ம் ஆண்டு மனசினகாரே என்ற மலையாள மொழித் திரைப்படம் மூலம் திரைப்படத்துறைக்கு அறிமுகமானர் நயன்தாரா.
அதனை தொடர்ந்து, 2005 ஆம் ஆண்டு நடிகர் சரத்குமார் நடிப்பில் வெளியான "ஐயா" திரைப்படத்தின் மூலம் தமிழ்த் திரைப்படத்துறைக்கு அறிமுகமான இவருக்கு முதல் படமே ஹிட் படமாக அமைந்தது.
இந்த படத்தில் இடம் பெற்ற பாடல்கள் ஹிட் அடித்து அம்மணியை பட்டிதொட்டியெங்கும் பிரபலமாக்கியது. தொடர்ந்து, ரஜினி, விஜய், அஜித்,சூர்யா என ஜோடி போட்டு நடித்த இவர் தமிழ் சினிமாவில் 2010களில் தொடங்கி இன்று வரை லேடி சூப்பர் ஸ்டார் என்று பட்டத்தை தாங்கி நிற்கிறார்.
ஆரம்பத்தில் கவர்ச்சி கதாபாத்திரங்களில் கல்லா கட்டிய நயன்தாரா இப்போது பெண்களை மையமாகக் கொண்டிருக்கும் கதைகளைத் தேர்ந்தெடுத்து நடித்துக் கொண்டிருக்கிறார்.
முன்னதாக இவர் கவர்ச்சித் தோற்றத்தில் நடித்தாலும் தற்போதெல்லாம் கவர்ச்சியை தவிர்த்து கதைக்குத் தேவையான தோற்றத்தில் மட்டுமே நடித்து வருகிறார்.
இந்நிலையில், இவர் நடிக்க வரும் டயானா மரியம் குரியனாக தொலைக்காட்சி சேனல் ஒன்றில் VJ-வாக வேலை பார்த்து வந்துள்ளார். அந்த வீடியோ காட்சிகள் இப்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.