இயக்குனர் அட்லியின் அடுத்த படத்தின் ஹீரோ ஷாருக்கான் இல்லை..! - இவரு தான்..! - ஷாக்கிங் அப்டேட்..!


நடிகர் விஜய் நடிப்பில் இயக்குனர் அட்லி இயக்கிய பிகில் திரைப்படம் வசூல் ரீதியாக வெற்றிப்படம் என்றாலும் விமர்சன ரீதியில் எதிர்பார்த்த வரவேற்பை பெறவில்லை. 

படம் வெளியாகி கலவையான விமர்சனங்களையே பெற்றது. இதனை தொடர்ந்து, பிகில் படத்திற்கு போட்டியாக வெளியான "கைதி" திரைப்படத்தின் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி 64 படத்தில் நடித்து வருகிறார். 

இந்நிலையில், இயக்குனர் அட்லி நடிகர் ஷாருக்கானை வைத்து "சங்கி" என்ற படத்தை இயக்கபோவதாக தகவல்கள் வெளியாகின. ஆனால், அது உண்மையில்லை என்று கூறுகிறார்கள். இயக்குனர் அட்லியின் அடுத்த படத்தில் ஹீரோவாக யார் நடிக்கபோகிறார் என்ற புதிய தகவல் ஒன்று தற்போது வெளியாகியுள்ளது. 

அதன் படி, நடிகர் விஜய்யே இயக்குனர் அட்லியின் அடுத்த படத்தில் நடிக்கவுள்ளதாகவும், சன் பிக்சர்ஸ் நிறுவனம் அந்த படத்தை தயாரிக்கவுள்ளது என நம்பதகுந்த வட்டாரங்களிடமிருந்து தகவல் வந்துள்ளன. 

இந்த கூட்டணி இன்னும் முடிவாகவில்லை என்றும், பேச்சுவார்த்தை தான் நடந்துகொண்டிருகின்றதாம். நடிகர் விஜய் ஓகே சொன்னால் அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும். ஆனால், தற்போது தன்னுடைய கவனம் முழுதையும் தளபதி64 படத்தில் தான் வைத்துள்ளார் விஜய் என்பது குறிப்பிடத்தக்கது.
Blogger இயக்குவது.