"பிகில்" போட்ட காசாவது கைக்கு வந்துச்சா..? - பிரபல விநியோகஸ்தர் வேதனை


நடிகர் விஜய், இயக்குனர் அட்லீ கூட்டணியில் மூன்றாவது படமாக தீபாவளியை முன்னிட்டு கடந்த மாதம் அக்டோபர் 25 ஆம் தேதி வெளியான படம் "பிகில்". 

இப்படம் வெளியான அன்றைய தினத்தில் இருந்தே கலவையான விமர்சனங்களை பெற்று வருகின்றது. வழக்கமாகவே விஜய் படத்தின் வசூல் விவரங்கள் என்பது தமிழ் சினிமாவிற்கு மட்டுமல்லாது அவரது ரசிகர்கள் மத்தியிலும் பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கும். 

காரணம் விஜயின் படங்கள் சமீப காலமாக தமிழ் சினிமாவின் முந்தைய சாதனைகளை முறியடித்து வருகின்றன. எனவே அந்த வரிசையில் பிகில் படமும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்ப்படுத்தி இருந்தது. இந்நிலையில் படத்தின் தயாரிப்பாளர் தரப்பில் இருந்து படம் 200 கோடி வசூலித்தாக சொல்லப்பட்டது. 

இந்தப் பதிவு ஆதரவோடு சேர்த்து விமர்சனங்களையும் சேர்த்தே பெற்றது. இந்நிலையில் பிகில் படத்தை மிகப்பெரிய அளவில் தமிழகத்தில் வியாபாரம் செய்தனர், இதில் போட்ட பணம் வந்ததா? என்று திருப்பூர் சுப்ரமணியத்திடம் பிரபல வார இதழ் கேட்டுள்ளது. 

அதற்கு அவர் ‘பிகில் நல்ல வசூல் தான், ஆனால் பெரிய தொகைக்கு படத்தை வாங்கியதால், போட்ட பணம் மட்டுமே கைக்கு கிடைக்கும் நிலை. ஆனால், கைதி மிகப்பெரிய லாபத்தை கொடுத்துள்ளது, போட்ட பணத்தை எடுப்பதற்கு எதற்கு தொழில் செய்ய வேண்டும், லாபம் வந்தால் தானே தொடர்ந்து தொழில் செய்ய முடியும்?’ என்று வேதனையுடன் கூறியுள்ளார்.
Powered by Blogger.