பிரிந்து வாழும் பெற்றோரை சேர்த்து வைக்காததற்கு இது தான் காரணம் - ஸ்ருதிஹாசன் விளக்கம்
பிரபல நடிகர் கமல்ஹாசன், இவர் கடந்த 1978ம் ஆண்டு வாணி கணபதி என்ற பாலிவுட் நடிகையை திருமணம் செய்து 1988-ம் ஆண்டு விவாகரத்து பெற்று பிரிந்தார். அதனை தொடர்ந்து, அதே வருடம், நடிகை சரிகா தாகூர் என்பவரை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்ட அவருக்கு ஸ்ருதி ஹாசன் மற்றும் அக்ஷரா ஹாசன் என இரண்டு பெண் குழந்தைகள் பிறந்தன.
சரிகா தாகூரை கடந்த 2004-ம் ஆண்டு விவாகரத்து செய்து விட்டார். அதன் பிறகு, பிரபல தமிழ் நடிகை கௌதமியுடன் சேர்ந்து வாழ்ந்து வந்தார். சமீபத்தில் அவரையும் பிரிந்து விட்ட அவர் தற்போது இன்னொரு திருமணம் ஆகாத நடிகையுடன் தொடர்பில் இருக்கிறார் என்ற தகவல் கிசுகிசுக்கப்பட்டுவருகின்றது.
இந்நிலையில், நடிகை ஸ்ருதிஹாசனிடம் தனது பெற்றோர்களின் வாழ்க்கை பற்றி முதன்முறையாக மனம் திறந்துள்ளார். அவர் கூறியதாவது, என்னுடைய வாழ்க்கையில் மிக முக்கியமான பாகம் என்றால் அது என்னுடைய அப்பா கமல்ஹாசன் மற்றும் அம்மா சரிகா தான். பொதுவாக அப்பா அம்மா பிரிந்து வாழ்ந்தால் மற்றவர்களுக்கு வேண்டுமானால் செய்தியாக இருக்கலாம்.
ஆனால் வீட்டில் உள்ளவர்களுக்கு அது மிகவும் வருத்தமான ஒன்றாகவே இக்கும். ஆனால் என்னை பொறுத்தவரையில் எனது அப்பா, அம்மா பிரிந்தது எனக்கு மகிழ்ச்சியான விஷயம் ஆகும். ஏனென்றால் என் அப்பா அம்மா இருவருமே மிகப்பெரிய நடிகர்கள்.
இருவரும் ஒருவருக்கொருவர் சண்டை போட்டுக்கொண்டு, நிம்மதி இல்லாமல் இருப்பதை விட தனித்தனியாக பிரிந்து அவரவர்கள் வாழ்க்கையை மகிழ்ச்சியாக வாழ்வதே சிறந்த விஷயமாகும். அப்பா அம்மா இருவரும் பிரிந்தது கஷ்டமாக இருந்தாலும் சேர்ந்து வாழும் போது நிறைய பிரச்சனைகள் உருவாகியது.
என் அப்பா அம்மா இருவரையும் சேர்த்து வைக்க வேண்டும் என்று தான் நினைத்தேன். ஆனால் அவர்கள் இருவரும் மீண்டும் சேர்ந்தால் ஒருவருக்கொருவர் சண்டையிட்டு மன நிறைவு இல்லாமல் தான் இருப்பார்கள். அதனால் தான் நான் அவர்கள் இருவரையும் சேர்த்து வைக்கும் முயற்சியில் ஈடுபடவில்லை.