"எனக்கு தெரியல, உங்களுக்கு தெரியுதா..?" - இரட்டை அர்த்த வசனத்துடன் கொலைகாரன் பட நடிகை வெளியிட்ட கவர்ச்சி புகைப்படம்
விஜய் ஆண்டனி , அர்ஜுன் நடிப்பில் சமீபத்தில் வெளியான திரைப்படம் கொலைகாரன். இதில் கதாநாயகியாக நடித்தவர் ஆஷிமா நர்வால். ஒரே படத்தின் மூலம் ரசிகர்களை மிகவும் கவர்ந்து விட்டார்.
ஆஷிமா நர்வால் ஹரியானா மாநிலத்தை சேர்ந்தவர். மேலும், ஆஸ்திரேலியாவின் குடியுரிமை பெற்றுள்ள இவர் 3 முறை அழகிப்பட்டம் வென்றுள்ளார்.
கொலைகாரன் படத்தில் ஹீரோயின் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். மேலும் தமிழில் தற்போது "ராஜ பீமா" என்ற திரைப்படத்தில் மட்டும் நடித்து வருகிறார்.
இவர் மாடல் அழகி என்பதால் அடிக்கடி கவர்ச்சி களத்தில் குதித்து கிளாமராக போட்டோஷூட் நடத்திவருகிறார்.
அந்தவகையில், பட வாய்பை பெற தற்போது கவர்ச்சி உடையில் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படங்களில் ஒன்றாக பின்னால் திரும்பி பார்த்தபடி போஸ் கொடுத்துள்ள ஒரு புகைப்படத்திற்கு "எனக்கு தெரியல, உங்களுக்கு தெரியுதா..?" என்று இரட்டை அர்த்த வசனத்தை பதிவு செய்து ரசிகர்களை கிறங்கடித்துள்ளார்.