இரண்டு படங்களை அடுத்தடுத்து முடித்த கார்த்திக் சுப்பராஜ் - அடுத்து இயக்கவுள்ளது இந்த நடிகரையா..?


பல சர்ச்சைகளில் சிக்கி நடிகர் ரஜினிகாந்த் நடித்த 'பேட்ட' படம் மூலம் மீண்டும் எனர்ஜியாகத் திரும்பியவர் இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ். தனுஷ் நாயகனாக நடிக்க அவர் இயக்க வேண்டிய "சுருளி" படத்தை எப்போதோ ஆரம்பித்திருக்க வேண்டும். 

ஆனால், சில காரணங்களால் அந்தப் படம் தள்ளிப் போனது. கடந்த செப்டம்பர் மாதம் அந்தப் படத்தின் படப்பிடிப்பை லண்டனில் ஆரம்பித்தார்கள். தொடர்ந்து இடைவிடாமல் படப்பிடிப்பை நடத்தி சில தினங்களுக்கு முன்பு முடித்துவிட்டார்கள். 

அது பற்றிய அறிவிப்பை படத்தின் தயாரிப்பாளர் சஷிகாந்த் வெளியிட்டிருந்தார். இது இயக்குனர் கார்த்திக் சுப்பராஜின் படம். அடுத்து, தயாரிப்பாளர் கார்த்திக் சுப்பராஜின் படமாக அதே செப்டம்பர் மாதம் ஆரம்பமான படம் 'பெண்குயின்'. 

கீர்த்தி சுரேஷ் நாயகியாக நடிக்கும் ஹீரோயின் சப்ஜெத்க் படமான இப்படத்தை ஈஸ்வர் கார்த்திக் இயக்குகிறார். இந்தப் படத்தின் படப்பிடிப்பும் சில நாட்களுக்கு முன்பு முடிவடைந்தது. 

தன் தயாரிப்பிலும், இயக்கத்திலும் உருவான படங்களை ஒன்றாக ஆரம்பித்து ஒன்றாகவே முடித்திருக்கிறார் கார்த்திக் சுப்பராஜ். அவரது தயாரிப்பில் ஐஸ்வர்யா ராஜேஷ் நாயகியாக நடிக்கும் படத்தின் படப்பிடிப்பும் நடந்து வருகிறது.

இந்நிலையில், கார்த்திக் சுப்பராஜ் அடுத்து விஜய் சேதுபதியை இயக்கவுள்ளதாக நம்பதகுந்த வட்டாரங்கள் கூறுகின்றன. விஜய்சேதுபதியின் கடந்த சில படங்கள் எதிர்பார்த்த வெற்றியை பெறாத நிலையில் கார்த்திக் சுப்பராஜின் இந்த படம் அவருக்கு மீண்டும் ஒரு வெற்றியை கொடுக்கும் என எதிர்பார்க்கலாம்.
Powered by Blogger.