ஷாருக்கான் இல்லை, இயக்குனர் அட்லி அடுத்து இயக்கவுள்ள படத்தின் ஹீரோ யாரு தெரியுமா..?

விஜய் நடிப்பில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல விமர்சனம் பெற்று வரும் படம் பிகில். உலகம் முழுவதும் வெளியாகியுள்ள இப்படம் முதல் நாளில் மட்டும் ரூ.61.63 கோடி வரையில் வசூல் குவித்துள்ளது. 


இந்த நிலையில், இந்த படத்தின் வெற்றியை கொண்டாடும் வகையில் சன் டிவியில் சிறப்பு நிகழ்ச்சி ஒளிபரப்பானது. அப்போது அட்லியிடம் பிகில் 2 எடுக்க திட்டம் இருக்கிறதா..? என கேட்கப்பட்டது. 

அதற்கு, "ராயப்பன் யார், அவருடைய பின்னணி என்ன? மைக்கேல் எப்படி பிகில் ஆனார்? என்பது உள்ளிட்ட கேள்விகளை வைத்து ஒரு படம் எடுக்கும் யோசனை இருக்கிறது. ஆனால் அதை இப்போதைக்கு எடுக்கும் இல்லை", என பதிலளித்தார். 

மேலும், ரஜினியை வைத்து படமெடுக்கும் எண்ணம் உள்ளதா..? பாட்ஷா 2 படத்தை உங்களிடம் இருந்து எதிர்பார்க்கலாமா,.? என கேட்கப்பட்டது. அதற்கு, நிச்சயமாக ஒரு யோசனை இருக்கிறது. இதுவரை வெளிவந்த ஆக்ஷன் படங்களில் பாட்ஷா தான் சிறந்த டெம்ப்ளேட். ஒரு கதை தயாராக இருக்கிறது. தலைவர் (ரஜினி) சரியென்றால் ஷூட்டிங்க கெளம்பிட வேண்டியது தான் என அட்லி பதிலளித்தார்.

தற்போது, தர்பார் படத்தில் நடித்து வரும் ரஜினி. அடுத்து இயக்குனர் சிவா-வின் படத்தில் நடிக்கிறார். இந்நிலையில், அட்லி, ரஜினிக்கு கதை தயாராக இருக்கிறது என்று கூறியிருப்பது ரஜினி ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது. 

அதே நேரம் ஷாருக்கானுடன் அட்லி இணையும் படத்தின் அறிவிப்பு கடந்த நவம்பர் 2 ஷாருக்கானின் பிறந்தநாளில் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை. எனவே, தனது அடுத்த படத்தை சூப்பர் ஸ்டார் ரஜினியை வைத்து எடுப்பாரா அட்லி என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
Blogger இயக்குவது.