உடல் எடை குறைத்த சிம்புவின் அடுத்த படத்தை இயக்குவது இவரா..? - எகிறிய எதிர்பார்ப்பு..! - ரசிகர்கள் ஆச்சரியம்


லிட்டில் சூப்பர் ஸ்டார் என்று வலம் வந்து சிம்பு. இப்போது, பார்ட் டைம் நடிகர் சிம்பு என்றாகிவிட்டார். காரணம், சினிமா நடிப்பது என்பது இவருக்கு பார்ட் டைம் தான். ஃபுல் டைம் வேலையாக சர்ச்சையில் சிக்குவதை வைத்திருக்கிறார்.

கடைசியாக, வந்தா ராஜவா தான் வருவேன் படம் வெளியானது. அவ்வளவு தான, பிறகு சிம்பு நடிப்பில் எந்த படமும் வெளியாகவில்லை. இந்த வருட ஆரம்பத்தில் வெங்கட் பிரபு இயக்கத்தில் அவர் மாநாடு படத்தில் நடிப்பதாக கூறப்பட்டது. 

ஆனால், வழக்கம் போல இடையில் பிரச்சனை ஏற்பட தனியாக படத்தை தயாரிக்க இருப்பதாக செய்தி வெளியிட்டார். இதற்கு நடுவில் வெளிநாடு சென்ற அவர் உடல் எடை குறைத்து ஆளே மாறிப்போனார். இது ரசிகர்களுக்கு ஆச்சரியத்தை கொடுத்தார். 

இந்நிலையில், பார்ட் டைம் நடிகர் சிம்பு பற்றி வரும் தகவல் என்னவென்றால் வெங்கட் பிரபு இயக்கத்திலேயே "மாநாடு" படத்தில் நடிக்க அவர் ஒப்புக் கொண்டு ஒப்பந்தத்தில் கையொப்பம் இட்டதாக கூறப்படுகிறது. விரைவில் படத்திற்கான அறிவிப்பும் வரும் என்கின்றனர். இந்த விவகாரத்தில் நடிகர் சிம்புவின் தாயார் உள்ளே நுழைந்து பிரச்னையை சுமூகமாக முடித்து வைத்துள்ளார். 

ஒப்பந்தப்படி, சிம்பு படப்பிடிப்பிற்கு ஒழுங்காக வரவேண்டியது. அப்படி, தவறும் பட்சத்தில், அன்று படப்பிடிப்பு ரத்தானதால் ஏற்படும் நஷ்டத்தை பணமாக கொடுத்து விட வேண்டும். ஏற்கனவே, இதே ஒப்பந்தத்தை தான் செக்க சிவந்த வானம் படம் ஆரம்பித்த போதும் சிம்பு எழுதி கொடுத்தார் என்பது கூடுதல் தகவல்.
Powered by Blogger.