கொசு மருந்து மெஷினுக்கு நன்றி - ரசிகர்களை அலறவிட்ட இயக்குனர் லோகேஷ் கனகராஜ்


நடிகர் கார்த்தி நடிப்பில் வெளியான "கைதி" திரைப்படம் கடந்த தீபாவளி அன்று நடிகர் விஜய்யின் பிகில் படத்திற்கு போட்டியாக களமிறங்கி விமர்சன ரீதியாக வெற்றி பெற்றது.

மேலும், 100 கோடி க்ளப்பிலும் சேர்ந்து நடிகர் கார்த்தி மற்றும் இயக்குனர் லோகேஷ் கனகராஜிற்கும் ஒரு மைல் கல்லாக அமைந்தது. தற்போது, தளபதி64 படத்தை இயக்கி வரும் இயக்குனர் லோகேஷ் ,"கைதி" படத்தின் வெற்றி குறித்து தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் ஒரு பதிவை செய்து ரசிகர்களை அலறவிட்டுள்ளார்.

அவர் கூறியுள்ளதாவது, " கைதி வெற்றிகரமாக 25வது நாள்😊இதை சாத்தியமாக்கிய மக்களுக்கும் , ஊடக மற்றும் பத்திரிகை நண்பர்களுக்கும் நன்றி . 🙏🏻🙏🏻🙏🏻 அப்படியே அந்த கொசு மருந்து அடிச்ச மிஷினுக்கும் ஒரு குட்டி நன்றி😂" என்று கூறியுள்ளார். 

கைதி படத்தின் க்ளைமாக்ஸ் காட்சியில் இடம் பெற்ற அந்த Machine Gun-னை தான் இயக்குனர் லோகேஷ் கொசு மருந்து அடிச்ச மிஷின் என்று கூறியுள்ளார்.
Powered by Blogger.