அடேங்கப்பா..! - பிகில் படத்தில் C.M - தளபதி64 படத்தில் P.M - இணையத்தில் கசிந்த கதாபாத்திரத்தின் பெயர்..!


தளபதி 64 படத்தில் விஜய்யின் கதாபாத்திரம் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன.பிகில் படத்தை அடுத்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடித்து வருகிறார் விஜய்.

இந்தப் படத்தில் நாயகியாக மாளவிகா மேனனும், வில்லனாக விஜய்சேதுபதியும் நடிக்கின்றனர்.மேலும் இந்தப் படத்தில் மலையாள நடிகர் ஆண்டனி வர்கீஸ், சாந்தனு, ஸ்ரீமன், சஞ்சீவ், ஸ்ரீநாத், விஜே ரம்யா, உள்ளிட்டோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

இந்தப் படத்தின் படப்பிடிப்பு டெல்லியில் உள்ள கல்லூரி ஒன்றில் மும்முரமாக நடைபெற்று வருகிறது. அங்கு விஜய் நடிக்கும் காட்சிகள் படமாக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் நடிகர் விஜய் கழுத்தில் ஐடி கார்டு அணிந்து மாணவர்களுடன் அமர்ந்திருக்கும் புகைப்படங்கள் வெளியாகியிருந்தன.

இதனை தொடர்ந்து நடிகர் விஜய் ஆசிரியர் அல்லது மாணவனாக நடிக்க வாய்ப்புள்ளது என கூறினார்கள். இந்நிலையில், விஜய் ஆசிரியராக தான் நடிக்கிறார் என்று படத்தின் அவருடைய பெயர் கூறுகிறது.

ஆம், "Professor Milton" என்பது தான் தளபதி64 படத்தில் விஜய்யின் ஏற்றுள்ள கதாபாத்திரத்தின் பெயராம். ஏற்கனவே, பிகில் படத்தில் "Caption Michael" என்ற பாத்திரத்தில் நடித்து C.M., ஆன விஜய், இப்போது, இந்த படத்தில் "Professor Milton" என P.M., ஆகியுள்ளார்.
Blogger இயக்குவது.