விஸ்வாசம் vs பிகில் - முதல் வாரத்தில் அதிக வசூல் செய்த படம் எது..? - விநியோகஸ்தர்கள் அதிர்ச்சி தகவல்


நடிகர் விஜய்யின் "பிகில்" திரைப்படம் தீபாவளி ஸ்பெஷலாக கடந்த 25-ம் தேதி வெளியானது. ரிலீஸ் தேதியில் இருந்து இன்று வரை அமோகமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இந்த படத்திற்கு போட்டியாக கைதி திரைப்படம் வெளியாகி நல்ல விமர்சனங்களை பெற்று வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருகின்றது.

இந்நிலையில், பிகில் படத்தை தமிழ்நாட்டில் வாங்கிய விநியோகஸ்தர் படம் முதல் வார முடிவில் (7 நாட்களில்) ரூ. 100 கோடிக்கு வசூலித்துள்ளது என அறிவித்துள்ளார்.

ஆனால், அதே நேரம் கடந்த பொங்கல் பண்டிகையன்று ரஜினியின் பேட்ட படத்தை எதிர்த்து களமிறங்கிய அஜித்தின் விஸ்வாசம் படம் 8 நாள் முடிவில் ரூ.125 கோடி வசூலித்துள்ளதாக அந்த படத்தின் விநியோகஸ்தர் அறிவிப்பு வெளியிட்டிருந்தார்.

இதன் மூலம், நடிகர் விஜய்யின் பிகில் படத்தின் வசூல் அஜித்தின் விஸ்வாசம் படத்தின் வசூலை விட குறைவான வசூலை செய்துள்ளது. எனவே, இந்த வருடம் வெளியான படங்களில் தமிழகத்தில் முதல் வாரத்தில் அதிக வசூல் செய்த படங்கள் பட்டியலில் விஸ்வாசம் தான் முதலிடம் என்பது உறுதியாகியுள்ளது. 

யூட்யூப், ட்விட்டர் என பிகில் ஃபர்ஸ்ட்லுக் முதல் ட்ரெய்லர் வரை சாதனை மேல் சாதனை படைத்த விஜய் ரசிகர்களுக்கு களத்தில் விஸ்வாசம் படத்தின் வசூல் சாதனையை முறியடிக்க முடியாமல் போனது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Blogger இயக்குவது.