14 வயசுல ஹீரோயின் ஆன நடிகை துளசி நாயரா இது..? - ரசிகர்கள் ஷாக் - லேட்டஸ்ட் புகைப்படங்கள்


கடந்த 2013-ம் ஆண்டு நடிகர் கௌதம் கார்த்தி நடிப்பில் வெளியான "கடல்" என்ற படத்தின் மூலம் அறிமுகம் ஆனவர் முன்னாள் ஹீரோயின் ராதாவின் இளைய மகள் துளசி. அப்போது அவருக்கு வயது 14 மட்டுமே என்றார்கள். தொடர்ந்து ஜீவாவுடன் யான் படத்திலும் நடித்தார். 

ஆனால், இவர் நடித்த இந்த இரு படங்களுமேஎதிர்பார்த்த வரவேற்பை பெறவில்லை. அதனால், தொடர்ந்து அவருக்கு வாய்ப்புகள் எதுவும் கிடைக்கவில்லை. இதனால் நடிப்புக்கு தற்காலிக முற்றுப்புள்ளி வைத்துவிட்டு படிப்பின் மீது கவனம் செலுத்த தொடங்கினார். 

நீண்ட நாட்களாக துளசி குறித்த செய்திகள் எதுவும் வராமல் இருந்த நிலையில் தற்போது அவரது புகைப்படங்கள் வைரலாக பரவி வருகிறது. இந்த படத்தை பார்த்த ரசிகர்கள் துளசி தானா இந்த பெண் என அதிர்ச்சி அடைந்து கமெண்டுகளை தட்டி விடுகின்றனர். 


காரணம் ஆளே அடையாளம் தெரியாத அளவிற்கு அவர் குண்டாக காணப்படுகிறார்.

Powered by Blogger.