வைரலான இந்தியன் 2 Fan Made போஸ்டர் - வெட வெடத்து போன படக்குழு - ஆர்வக்கோளறுல ஆப்பு வச்சிருவாங்க போல இருக்கே..!?


இயக்குனர் ஷங்கர் இயக்க, லைகா நிறுவனம் தயாரிக்க என இந்தியன் 2 படம் விறுவிறுப்பாக எடுக்கப்பட்டு வருகிறது. இந்தப் படத்திலும் நடிகர் கமல் நடித்து வருகிறார். 

கடந்த 1996ல் இந்தியன் படம் எடுக்கப்பட்டபோது, அந்தப் படத்தில் சமூகப் பிரச்னையான ஊழலை மையமாக வைத்து இந்தியன் தாத்தா கேரக்டரில் நடிகர் கமல்அட்டகாசம் செய்திருந்தார். இன்று வரைக்கும் இந்தியன் தாத்தா ஸ்டைல் ஃபேமஸ்.

தற்போது, இந்தியன் 2 படத்தில், அந்த கேரக்டர் மட்டும் மையமாக இருந்தாலும் படத்தின் கதையை புதிதாக மாற்றி படமாக்கி வருகின்றனர். காஜல் அகர்வால் உள்ளிட்ட பல பிரபலங்களும் படத்தில் நடித்து வருகின்றனர். 

இந்நிலையில், இந்தியன் 2 என்ற பெயரில், சமூக வலைதளங்களில் போஸ்டர்கள் வெளியாகி இருக்கின்றன. அவை போலியானவை என, படக் குழுவினர் தெரிவித்திருக்கின்றனர்.

அதற்கு காரணம், இந்தியாவையே உலுக்கிய 2G அலைக்கற்றை ஊழலை நினைவு படுத்தும் 1,70,000,000,0000 ரூபாயை அந்த போஸ்டரில் இணைத்திருப்பது தான். 

இந்த வழக்கில் குற்றம் சாட்டபட்ட திமுக கனிமொழி மற்றும் ராசா ஆகியோர் நிரபராதிகள் எனவும் இந்த வழக்கை தள்ளுபடி செய்தும் கீழ் நீதிமன்றத்தில் உத்தரவிடப்பட்டது. 

இதனை தொடர்ந்து, சுப்ரீம் கோர்டில் அந்த வழக்கு மேல் முறையீடு செய்யபட்டு அடுத்த வரும் ஜனவரி மாதம் விசாரணை தொடங்குகிறது.

தற்போதைய நிலவரப்படி அப்படி ஒரு ஊழலே நடக்கவில்லை என்பது தான் முடிவு. நிலைமை இப்படியிருக்க ஆர்வக்கோளாறு ரசிகர்கள் இப்படியான போஸ்டரை வெளியிட்டுள்ளது படக்குழுவினரை கிடுகிடுக்க வைத்துள்ளது.

இணையத்தில் வைரலாகி வரும் அந்த புகைப்படம் இதோ,


Blogger இயக்குவது.