வெறித்தனம்... வெறித்தனம்...! - பிகில் 50வது நாள் - விஜய் ரசிகர்கள் வேற லெவல் கொண்டாட்டம்..!


அட்லி இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் தீபாவளி விருந்தாக வெளிவந்த திரைப்படம் பிகில். படத்தின் சிங்கிள் ட்ராக் முதல் ட்ரெய்லர் வரை அனைத்தும் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றாலும் படம் வெளியானவுடன் பிகில் குறித்த கலவையான விமர்சனங்கள் வெளிவந்தன. 

குறிப்பாக படத்தில் உள்ள காட்சிகள் ஆங்கில திரைப்படங்களில் உள்ள காட்சிகளை காப்பி அடித்து எடுத்ததாகவும் எதிர்பார்த்த அளவிற்கு படம் இல்லை எனவும் ஒரு சிலரால் விமர்சிக்கப்பட்டது. 

படம் வெளியான முதல் 3 வாரங்களிலேயே உலகம் முழுவதும் ரூ.300 கோடி வசூலை கடந்த இந்த திரைப்படம், தற்போது 50 நாளான இன்றும் திரையரங்குகளில் வெற்றிகரமாக திரையிடப்பட்டு வருகிறது. 

பிகில் திரைப்படத்திற்கு பிறகு வெளியான படங்கள் கூட திரையரங்குகளில் இருந்து நீக்கப்பட்டுவிட்டன. ஆனால் சென்னையின் பல்வேறு திரையரங்களில் இன்றும் பிகில் திரைப்படம் திரையிடப்பட்டு வருகிறது.

இதனை கொண்டாடும் விதமாக விஜய் ரசிகர்கள டிவிட்டரில் #Bigil50thDay என்ற டேக்கை ட்ரென்ட் செய்து வெறித்தனமாக கொண்டாடி வருகிறார்கள்.


Powered by Blogger.