தளபதி64 படத்தில் விஜய் சிறைக்கு செல்ல காரணம் இது தானாம் - செம்ம மாஸ் அப்டேட்..!


இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் உருவாகும் படம் தளபதி 64. இந்தப் படத்தில் படபிடிப்பு வேகமாக நடந்து வருகிறது. இதுவரை இரு கட்டங்களாக படபிடிப்பு முடிந்து விட்டது. 

சென்னையில் நடத்தப்பட்ட படபிடிப்பில், நடிகர் விஜய் மற்றும் சாந்தனு சம்பந்தப்பட்ட காட்சிகளும், மாளவிகா மோகன் சம்பந்தப்பட்ட காட்சிகளும் படமாக்கப்பட்டு விட்டன. 

இதையடுத்து, மூன்றாம் கட்ட படபிடிப்புக்காக, தற்போது படக்குழு, கர்நாடாகாவின் சிமோகாவில் முகாமிட்டிருக்கிறது. நடிகர் விஜய்யும், அவருக்கு எதிராக வில்லனாக படத்தில் நடிக்கும் விஜய் சேதுபதி ஆகியோர் சம்பந்தப்பட்ட காட்சிகள் அங்கே படமாக்கப்படவிருப்பதாகக் கூறப்படுகிறது. 

நடிகர் விஜய், கர்நாடாகாவில் இருக்க, விரைவில் நடிகர் விஜய் சேதுபதி அங்கு செல்கிறார். படத்தில், நாட்டில் இருக்கும் கல்வி முறைக்கும், அதில் இருக்கும் ஊழல் பெருச்சாலிகளுக்கும் எதிராக கருத்து மழை பொழியும் கேரக்டரில் நடிகர் விஜய் நடிப்பதாகக் கூறப்படுகிறது. 

அதாவது, கல்லூரி பேராசிரியர் வேடத்தை நடிகர் விஜய் ஏற்று நடிக்கிறார். கல்விக்கொள்கைக்கு எதிராக போராடும் விஜய்யை வேறு சில காரணங்கள் கூறி சிறையில் அடைத்து விடுகிறார்கள். அப்போது, வில்லன் விஜய் சேதுபதியுடன், பேராசிரியர் விஜய் சண்டையிடுவது போன்ற காட்சிகள் படத்தில் உள்ளன. அப்படிப்பட்ட காட்சிகளைத்தான், கர்நாடகாவில் படக் குழு படமாக்கி வருகின்றது.
Blogger இயக்குவது.