தளபதி 64 தலைப்பு மற்றும் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் ரிலீஸ் - தேதி மற்றும் நேரம் அறிவிப்பு..!


பிகில் படத்துக்குப் பிறகு லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் தனது 64-வது படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்துக்கு ‘தளபதி 64’ என்று தற்காலிகமாக டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. 

இந்தப் படத்தில் விஜய்க்கு ஜோடியாக மாளவிகா மோகனும், வில்லனாக விஜய் சேதுபதியும் நடிக்கின்றனர். இவர்களுடன் சாந்தனு, ஸ்ரீமன், சஞ்சீவ், விஜே ரம்யா, ஆன்ட்ரியா, கைதி பட வில்லன் அர்ஜுன் தாஸ் உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர். 

படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், இந்த படத்தின் தலைப்பு மற்றும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வரும் 31-ம் தேதி மாலை 5 மணிக்கு வெளியிடப்படும் என படக்குழு அறிவித்துள்ளது.
Blogger இயக்குவது.