தளபதி 64 முக்கால் வாசி படம் இங்கு தான் - வெளியான அறிவிப்பு..!
பிகில் படத்துக்குப் பிறகு லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் தனது 64-வது படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்துக்கு ‘தளபதி 64’ என்று தற்காலிகமாக டைட்டில் வைக்கப்பட்டுள்ளது.
இந்தப் படத்தில் விஜய்க்கு ஜோடியாக மாளவிகா மோகனும், வில்லனாக விஜய் சேதுபதியும் நடிக்கின்றனர். இவர்களுடன் சாந்தனு, ஸ்ரீமன், சஞ்சீவ், விஜே ரம்யா, ஆன்ட்ரியா, கைதி பட வில்லன் அர்ஜுன் தாஸ் உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர்.
இந்நிலையில், இந்த படம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. அதன் படி கர்நாடகாவில் உள்ள சிறை ஒன்றில் தொடர்ந்து 40 நாட்கள் படப்பிடிப்பு நடத்ததிட்டமிட்டுள்ளதாம் படக்குழு.
இதனை வைத்து பார்க்கும் போது தளபதி64 படத்தில் முக்கால் வாசி ஜெயில் சம்பந்தமான காட்சிகள் தான் இருக்கும் என தோன்றுகின்றது.
#ThalapathyVijay & #VijaySethupathi will be Shooting for Important Scenes at Shivamoga Prison in Karnataka. The Shooting will continue in the PRISON & From Dec 2nd Week, for more than 40 Days!🔥 @Vijay64FiIm— #Thalapathy64 (@Vijay64FiIm) December 8, 2019