நீ எனக்கு மனைவி மட்டுமல்ல - இயக்குனர் அட்லி உருக்கமான பதிவு..!


ராஜா ராணி என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக தடம் பதித்த இயக்குனர் அட்லி நடிகர் விஜய்யோடு தொடர்ந்து மூன்று படங்கள் பணியாற்றி அதில் மூன்றையும் மிகப்பெரிய ஹிட் கொடுத்து தற்போது டாப் இயக்குனர்கள் லிஸ்டில் உள்ளார். 

பிகில் படத்திற்கு பிறகு அவர் யாரை இயக்குகிறார்.? என்ற பெரிய எதிர்பார்ப்பு ரசிகர்கள் மனதில் உள்ளது. இதுஒருபுறமிருக்க இன்று அட்லீ தன் மனைவி பிரியாவின் பிறந்தநாளுக்காக இன்ஸ்டாகிராமில் வாழ்த்து தெரிவித்துள்ளார். 

அவர் கூறியுள்ளதாவது, "சந்தித்தோம், நண்பர்களானோம், பின்னர் திருமணம் செய்துகொண்டோம். நீ எனக்கு மனைவியானாய். இப்போது நீ எனக்கு மகள், எனக்கு எல்லாமே நீதான்" என சொல்லியுள்ளார் அட்லீ.
Blogger இயக்குவது.