கூட்ட நெரிசலில் கையோடு வந்த மேலாடை..! - மறைத்து ஓடிய நடிகையின் பரிதாப நிலை.!


சினிமா நடிகைகளை பொருத்தவரை ரசிகர்கள் என்றாலே கொஞ்சம் பீதியாகி விடுவார்கள். ஆனாலும், பணத்திற்காக கடை திறப்பு விழாக்கள் மற்றும் பொருட்கள் அறிமுகம் செய்யும் விழாக்கள் என பொதுவெளிக்கு நடிகைகள் வந்தாக வேண்டிய சூழல் உள்ளது.

அப்படி வரும் நடிகைகளை, அவர்கள் மீதுள்ள பிரியத்தால் நடிகர்களை தொட முயல்வது, கட்டிபிடிக்க முயல்வது, செல்ஃபி எடுக்க முயல்வது என அனைத்து விஷயங்களையும் ரசிகர்கள் செய்வார்கள். 

இதனாலேயே எப்போதும் பாதுகாப்புடன் இருக்க வேண்டியுள்ளது. அதிலும் பெரிய நடிகர், நடிகைக்கள் என்றால் சொல்லவே வேண்டாம்.  சமீபத்தில் கூட நடிகையுடன் செல்பி எடுக்கும்போது ஒரு நடிகையின் இடுப்பை தடவினார் ஒரு ரசிகர். 

அதேபோல் பிரபல பாலிவுட் நடிகை ஒருவர் தனக்கு நடந்த மோசமான அனுபத்தை சமீபத்திய பேட்டி ஒன்றில் குறிப்பிட்டிருக்கிறார். அவர் ராய்ப்பூர் அருகே நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்வதற்காக சென்றிருக்கிறார். 

அப்போது எதிர்பாராதவிதமாக அவரது ரசிகர்கள் அவரை சூழ்ந்து கொண்டனர் என்று குறிப்பிட்டுள்ளார். மேலும் என்னதான் பாதுகாப்பு வளையங்கள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தாலும் அதையும் மீறி ரசிகர்கள் தன்னை தொட முயன்றனர். 

அப்போது எகிறிவந்த ரசிகர் ஒருவரின் கையில் எதிர்பாராதவிதமாக என்னுடைய மேலாடை சிக்கிகொண்டது. அந்த ரசிகர் அதனை கையுடன் சென்றுவிட்டார். நான் என்னுடைய காருக்கு அருகில் வந்து விட்டதால் கைகளால் மறைத்துக்கொண்டு சட்டென காரில் ஏறிவிட்டேன் என்று குறிப்பிட்டுள்ளார்.
Powered by Blogger.