ஆதித்ய வர்மா-வை தொடர்ந்து பாலா இயக்கிய வர்மா படமும் ரிலீஸ் ஆகின்றது - எப்படி தெரியுமா..? - மகிழ்ச்சியில் பாலா ரசிகர்கள்.!
தெலுங்கில் வெளியாகி செம்ம ஹிட் அடித்த படம் "அர்ஜுன் ரெட்டி" இந்த தெலுங்கு படத்தை, தமிழில் வர்மா என்ற பெயரில் பாலா இயக்க, நடிகர் விக்ரம் மகன் துருவ் விக்ரம் மற்றும் நடிகர் மேகா ஆகியோர் நடித்தனர்.
ஆனால், இந்த படம் எதிர்பார்த்தது போல் படம் உருவாகவில்லை என்பதால் இ4 என்டர்டெயின்மென்ட் தயாரிப்பு நிறுவனம், இதே கதையை கிரிசய்யா இயக்க, துருவ் நடிப்பில், ஆதித்ய வர்மா என்ற பெயரில் எடுத்தது.
படம் வெளியாகி, மாறுபட்ட கருத்துகள் மற்றும் கலவையான விமர்சங்கள் வந்தாலும், துருவ் விக்ரமின் நடிப்பு பேசப்பட்டது. இந்நிலையில், பாலா இயக்கிய வர்மா படத்தை, இணையத்தில் வெளியிட, தயாரிப்பு நிறுவனம் திட்டமிட்டு உள்ளதாக, தகவல் வெளியாகி உள்ளது.
பல கோடி ரூபாய் செலவு செய்து எடுத்த அந்த படத்தை அப்படியே கிடப்பில் போட்டால் யாருக்கும் பயனில்லை. ஆன்லைனில் வெளியிட்டு கணிசமான தொகையை கண்ணில் பார்க்கலாம் என தயாரிப்பு நிறுவனம் எடுத்த முடிவு, விக்ரம் தரப்பை அதிர்ச்சிக்கு உள்ளாக்கி இருக்கிறது.
ஆனாலும், நடிகர் துருவ் விக்ரமின் மாறுபட்ட நடிப்பு வெளிப்பட இந்த படம் ஒரு வாய்ப்பாக இருக்கும் என்கின்றனர் விவரம் அறிந்த திரையுலக வட்டாரத்தினர்.
மேலும், இயக்குனர் பாலா இயக்கிய இந்த படத்தை பார்த்த பாலாவின் ரசிகர்கள் ஆவலுடன் உள்ளனர்.