சர்ச்சை பேச்சு - ராகவா லாரன்ஸ் எடுத்துள்ள அதிர்ச்சி முடிவு..! - அடக்கொடுமைய..!
பிரபல நடிகர் ராகவா லாரன்ஸ் தீவிரமான ரஜினி ரசிகர் என்பது அனைவரும் அறிந்த விஷயம். சினிமாவை தாண்டி ரஜினிக்கும், ராகாவா லாரான்சிற்கும் இருக்கும் ஆன்மீக நாட்ட ஒற்றுமை தான் இதற்கு காரணம்.
அந்த வகையில், சமீபத்தில் நடந்த தர்பார் இசை வெளியீட்டு விழாவில் நடிகர் ரஜினிகாந்தின் அரசியல் பிரவேசத்தை எதிர்த்து பேசும் சில அரசியல்வாதிகளை இவர் கடுமையாக தாக்கி பேசியது பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது.
இது போதாது என, நான் சிறு வயதில் கமல் போஸ்டர் மீது சாணி அடிப்பேன் என கூறியதற்காக அவரை பலரும் விமர்சித்தனர். அதற்கு கமலை நேரில் சந்தித்து விளக்கம் கொடுத்தார் ராகவா லாரன்ஸ். ஆனாலும் ட்ரோல் தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறது.
இந்நிலையில் ராகவா லாரன்ஸ் வெளியிட்டுள்ள ஒரு அறிவிப்பில் "நான் இனி தலைவர் சம்பந்தப்பட்ட எந்த விழாவிலும் அவரது அனுமதி இல்லாமல் பங்கேற்கமாட்டேன்" என கூறியுள்ளார். "இதற்கு பின்னால் சொல்லமுடியாத பல்வேறு காரணங்கள் இருக்கின்றன " என்றும் கூறியுள்ளார் அவர்.
இன்றைய காலகட்டத்தில், அரசியல் வாதிகள் தாங்கள் ஆட்சிக்கு வந்தால் என்ன செய்வோம் என்று சொல்வதை விட தனக்கு எதிராக இருக்கும் அரசியல் வாதிகளை வசை பாடுவதிலேயே அதிக கவனம் செலுத்து கிறார்கள். இது அரசியல் என்று சொன்னாலே வெகுசனமக்கள் வெறுத்து ஒதுக்கும் நிலையை உருவாக்கியுள்ளது.
இதனை நன்கு அறிந்தவர் ரஜினி, அதனால், யாரையும் எதிர்த்து பேசாமால். நான் வந்தால் என்ன செய்வேன், எதனை மாற்றுவேன் என்று தான் செய்யபோவதை மட்டுமே எடுத்து சொல்லி அரசியல் செய்யும் முடிவில் இருக்கிறார்.
ஆனால், லாரன்ஸ் இப்படி மற்ற அரசியல் தலைவர்களை எதிர்த்து பேசுவது அவர்களுக்கும் ரஜினிக்கும் இருக்கும் வித்தியாசத்தை உடைப்பது போல இருந்தது தான் ராகவா லாரன்ஸ் இப்படியொரு முடிவை எடுக்க காரணம் என பேசிக்கொள்கிறார்கள்.