கமல் போஸ்டர் மீது சாணியடித்த விவகாரம் - முதன் முறையாக ராகவா லாரன்ஸ் விளக்கம்


நடிகர் கமல்ஹாசன் இந்திய சினிமாவின் சிறந்த நடிகர்களில் ஒருவர். தற்போது, நடிப்பு மட்டுமின்றி அரசியலிலும் கால் பதித்துள்ளார். ஆனால், தர்பார் பட விழாவில் இவர் குறித்து லாரன்ஸ் பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. 

தர்பார் இசை வெளியீட்டு விழாவில் ‘கமல் போஸ்டரின் மீது சிறிய வயதில் சாணியடித்துள்ளேன்’ என்று லாரன்ஸ் பேசினார். இவரின் இந்த பேச்சுக்கு கமல் ரசிகர்கள் பலரும் கண்டனம் தெரிவித்தனர்.

இதுக்குறித்து நேற்று நடந்த ரஜினி பிறந்தநாள் விழாவில் லாரன்ஸ் ‘கமல் சாருக்கு நான் ஒருநாளும் துரோகம் நினைக்க மாட்டேன். சிறிய வயதில் அதுவும் அறியாத வயதில் கமல் சார் போஸ்டரில் சாணியடித்தேன். 

ஆனால், தற்போது அதை நினைத்தால் வேதனையாக உள்ளது என்று தான் கூற வந்தேன். ஆனால், அது தவறாகி போய்விட்டது’ என்று லாரன்ஸ் விளக்கம் அளித்துள்ளார். முன்னதாக, இது குறித்து நான் மன்னிப்புகேட்க மாட்டேன் என்று லாரன்ஸ் கூறியிருந்ததும் குறிப்பிடத்தக்கது.
Powered by Blogger.