உங்கள் வீட்டுக்கு வந்தால் நான் தான் சமைப்பேன் - உங்களுக்கு ஓ.கே-வா..? - நடிகையின் கேள்விக்கு ரஜினியின் ரியாக்ஷன்
‘சர்கார்’ படத்தை அடுத்து ரஜினிகாந்த் நடிக்கும் ‘தர்பார்’ படத்தை இயக்கியுள்ளார் ஏ.ஆர்.முருகதாஸ்.
ரஜினிகாந்தின் 167-வது படமாக உருவாகியுள்ள இந்தப் படத்தில் ரஜினிகாந்த், ஆதித்யா அருணாசலம் என்ற கதாப்பாத்திரத்தில் போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார்.
அவருக்கு ஜோடியாக நயன்தாராவும், இவர்களுடன் பாலிவுட் நடிகர் சுனில் ஷெட்டி, நகைச்சுவை நடிகர் யோகி பாபு, உள்ளிட்டோரும் நடித்துள்ளனர்.
பொங்கலுக்கு திரைக்கு வர இருக்கும் இந்தப் படத்தின் இசைவெளியீட்டு விழா நேரு உள் விளையாட்டு அரங்கில் பிரமாண்டமாக நடைபெற்றது.
இசைவெளியீட்டு விழாவின் போது லைகா நிறுவனத்தின் சாதனைகளை விளக்கும் விதமாக ஸ்பெஷல் வீடியோ ஒன்று ஒளிபரப்பபட்டது. அதில் லைகா தயாரிப்பில் விஜய் நடித்த கத்தி, ரஜினிகாந்த் நடித்த 2.0 திரைப்படங்கள் இடம்பெற்றிருந்தன.
விழாவில் பேசிய நடிகை நிவேதா தாமஸ், இந்த படத்தில் ரஜினி சார்க்கு மகளாக நடித்துள்ளேன். இந்த வாய்ப்பு கிடைக்கும் என கனவில் கூட நினைத்து பார்த்தது இல்லை. படப்பிடிப்பு தளத்தில் ஒரு காட்சியில் கூட ரஜினி சார் முகம் சுளிக்கவில்லை. அவ்வளவு எனர்ஜி
அவருக்கு.
ஆண்டவன் சொல்றான் ஆதித்ய அருணாச்சலம் முடிக்கிறான், அதுதான்
இனிமே டயலாக் என்று கூறினார். மேலும், பேசிய அவர் ரஜினி சார் நீங்க என்னை உங்க வீட்டுக்கு அழைத்துள்ளீர்கள். நான் உங்கள் வீட்டுக்கு வரும் போது நான் தான் உங்களுக்கு சமைத்து போடுவேன் என்று கூறினார். இதனை கேட்ட ரஜினி இரண்டு கைகளையும் தூக்கு தம்ப்ஸ்-அப் செய்தார்.