அந்த படத்தில் நடித்தது மிகப்பெரிய தவறு - உண்மையை உடைத்த நடிகர் சிவகார்த்திகேயன்


நடிகர் சிவகார்த்திகேயனின் வளர்ச்சி குறித்து சொல்லி தெரியவேண்டியதில்லை. கிடுகிடுவென வேகமாக வளர்ந்து வந்த அவருக்கு சமீபத்தில் வெளியான சீமராஜா மற்றும் மிஸ்டர்.லோக்கல் ஆகிய படங்கள் சறுக்கலை கொடுத்தன. 

இதனால், துவண்டு போனார் சிவகார்த்திகேயன். ஆனால், நம்ம வீட்டு பிள்ளை திரைப்படம் சிவகார்த்திகேயனுக்கு ஹிட் படமாக அமைந்தது. இந்நிலையில், சமீபத்திய பேட்டி ஒன்றில் நான் அந்த படத்தில் நடித்து மிகப்பெரிய தவறு என்று பேசியுள்ளார். 

ஆம், மிஸ்டர்.லோக்கல் படத்தில் நடித்தது என்னுடைய மிகப்பெரிய தவறு. இயக்குனர் ராஜேஸை எனக்கு மிகவும் பிடிக்கும். பாஸ் என்கின்ற பாஸ்கரன், ஒரு கல் ஒரு கண்ணாடி, சிவா மனசுல சக்தி போன்ற சூப்பர் காமெடி படங்களை எடுத்தவர். 

மிஸ்டர்.லோக்கல் கதையை அவர் என்னிடம் கூறும் போது அவரிடம் வேறு கதை வேண்டும் என கேட்டு இருக்க வேண்டும். ஆனால், நான் அந்த சமயத்தில் இருந்த ஒரு சில பிரச்சனைகளால், படத்தை நடித்துக்கொடுத்தால் போதும் என்று நடித்துவிட்டு விலகிவிட்டேன்’ என்று கூறியுள்ளார்.
Powered by Blogger.