கமல்ஹாசன் போஸ்டர் மீது சாணி அடிப்பேன் - ராகவா லாரன்ஸ் சர்ச்சை பேச்சு
ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் அனிருத் இசையமைப்பில் ரஜினிகாந்த், நயன்தாரா மற்றும் பலர் நடிக்கும் 'தர்பார்' படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடைபெற்றது.
நிகழ்ச்சியில் கலந்து கொண்டு இயக்குனரும், நடிகருமான ராகவா லாரன்ஸ் பேசிய பேச்சு சர்ச்சையாகி உள்ளது. நேற்று இரவு அவர் பேசிய உடனேயே சமூக வலைத்தளங்களில் பலரும் அவருடைய பேச்சுக்கு கண்டனங்களைத் தெரிவிக்க ஆரம்பித்தனர்.
அதன் பிறகு அதற்கு நள்ளிரவிலேயே விளக்கமும் கொடுத்துள்ளார் ராகவா.அவர் பேசுகையில், “தலைவர் படம் ரிலீஸ் ஆகும் போது, போஸ்டர் ஒட்டும் போது சண்டை போட்டிருக்கிறேன். இங்க சொல்றதுல தப்பில்லை. கமல் சார் போஸ்டர் ஒட்டினால் அதுல போய் சாணி அடிப்பேன். அப்போ வந்து மனநிலைமை அப்படி இருந்தது. அவ்வளவு தீவிரமான ரசிகனா இருந்த என்னை இப்ப முதல் வரிசைல உட்கார வச்சி அழகு பார்க்கற ஒரே மனுஷன் சூப்பர் ஸ்டார்தான்.
கமல்ஹாசன் மீது சாணி அடிப்பேன் என ராகவா லாரன்ஸ் பேசிய இந்த பேச்சுக்கு கண்டணங்கள் எழுந்ததும் ராகவா லாரன்ஸ் அதற்கு ஒரு விளக்கமளித்தார்.
அதில், “ நான் சிறு வயதில் தலைவரின் தீவிர ரசிகனாக இருந்த போது கமல் சார் பற்றித் தெரியாமல் செய்த விஷயம் அது. கமல் சார் மீது நான் மிகுந்த மரியாதை வைத்திருக்கிறேன். நான் எப்போதாவது தவறாகப் பேசியிருந்தால் அதற்கு மன்னிப்பு கேட்பேன். ஆனால், இங்கு நான் எதுவும் தவறாகப் பேசவில்லை. என் மனதில் கமல் சாருக்கு எவ்வளவு மரியாதை என்பது எனக்குத் தெரியும். அதை யாருக்கும் நிரூபிக்க வேண்டிய அவசியமில்லை." என்றுகூறியுள்ளார்.