இதுக்காகவா பொன்னியின் செல்வன் படத்தில் இருந்து வெளியேறினார் கீர்த்தி சுரேஷ் - ரசிகர்கள் ஆச்சரியம்..!
இயக்குனர் மணிரத்தினம் இயக்கத்தில் உருவாகவுள்ள 'பொன்னியன் செல்வன்' படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிகை கீர்த்தி சுரேஷ் நடிக்க சம்மதித்திருந்தார்.
ஆனால், தற்போது இந்த படத்தில் இருந்து அவர் விலகி விட்டார். வரலாற்று சிறப்பு மிக்க பிரமாண்டமான பொன்னியின் செல்வன் நாவலின் ஒரு பகுதி இப்போது படமாக எடுக்கப்படுகிறது.
பொன்னியின் செல்வன் நாவலுக்கென தனி ரசிகர் பட்டாளம் உள்ளது என்பது அனைவரும் அறிந்த விஷயம். இந்த நாவல் படமாகபோவது அந்த ரசிகர்களுக்கு மிகுந்த எதிர்பார்ப்பை கொடுத்துள்ளது.
இந்த படத்தில் நடிக்கும் நடிகர், நடிகைகள் குறித்து அவ்வபோது அப்டேட்கள் வந்த வண்ணம் உள்ளன.ஆனால்,இப்படி ஒரு கதை, அதுவும் மணிரத்தினம் இயக்கும் இந்த படத்தில் இருந்து நடிகை கீர்த்திசுரேஷ் விலகியிருப்பது ரசிகர்கள் பலரையும் ஷாக் ஆக்கியது.
இதற்கு என்ன காரணம் என்று தற்போது தெரிய வந்துள்ளது. ஆம், சூப்பர் ஸ்டார் ரஜினி நடிக்க, சிறுத்தை சிவா இயக்கவுள்ள தலைவர் 168 படத்தில் ரஜினிக்கு மகளாக நடிக்க கமிட்டாகியுள்ளார் கீர்த்தி சுரேஷ்.
இந்தப் படத்திற்கான படப்பிடிப்பு தேதிகளும் 'தலைவர் 168' படப்பிடிப்பிற்கான தேதிகளும் ஒரே நேரத்தில் வருகின்றன. ஆகவே மணிரத்னம் இயக்கத்தில் நடிப்பதில் கீர்த்தி சுரேஷுக்கு சிக்கல் ஏற்பட்டதாக தெரிகிறது.
எனவே வேறு வழியில்லாமல், 'பொன்னியன் செல்வன்' படத்திலிருந்து கீர்த்தி சுரேஷ் வெளியேற முடிவெடுத்துவிட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.
ஏனெனில் கீர்த்தி முதன்முறையாக ரஜினிகாந்துடன் இணைந்து நடிக்க உள்ளார். இவருக்கு இது மிகப் பெரிய வாய்ப்பு. ஆகவே இந்த வாய்ப்பை அவர் இழக்க விரும்பவில்லை எனக் கூறியதாக விவரம் அறிந்த வட்டாரங்கள் கூறுகின்றன.
இதனை அறிந்த ரசிகர்கள் பலரும்,இதுக்காகவா பொன்னியின் செல்வன் படத்திலிருந்து வெளியேறினார் கீர்த்தி சுரேஷ் என ஆச்சரியத்தில் உள்ளனர்.