ஒரே ஒரு ட்வீட் - ஒட்டுமொத்த ஹேட்டர்ஸ்க்கும் ஆப்பு வைத்த பிகில் பட தயாரிப்பாளர்..!


நடிகர் விஜய் நடிப்பில், அட்லி இயக்கத்தில் தீபாவளிக்கு வெளியான பிகில் திரைபடம் வெற்றிகரமாக 50 நாட்களை கடந்துள்ளது. 

இந்நிலையில், 2019ஆம் ஆண்டின் அதிக வசூல் ஈட்டிய தமிழ் திரைப்படம் என்ற சாதனையை பிகில் படைத்துள்ளதாக படத்தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி தெரிவித்துள்ளார்.

பிகில் திரைப்படத்தின் 50வது நாளை விஜய் ரசிகர்கள் இன்று கொண்டாடி வருகின்றனர். 

இதனை முன்னிட்டு சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ள படத்தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி, போலீஸ் வேடத்தில் வரும் ரவுடியை அடிக்கும் விஜய்யின் புகைப்படத்தை வெளியிட்டு, பிகில் படத்தை வெற்றி அடைய வைத்த ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்து கொள்வதாக தெரிவித்துள்ளார்.

இதன் மூலம் பிகில் படம் தோல்வி படம் என்று கூறி வந்த ஹேட்டர்களுக்கு ஆப்பு வைத்துள்ளார் அர்ச்சுமா என்று கூறி வருகிறார்கள் விஜய் ரசிகர்கள்.
Powered by Blogger.