மீண்டும் எப்போது தளபதியை இயக்குவீர்கள்..? - வேலாயுதம் இயக்குனரின் அதிரடி பதில்..!
நடிகர் விஜய் நடிப்பில் வெளியான வேலாயுதம் படத்தைஇயக்கியவர் இயக்குனர் மோகன் ராஜா. கடந்த 2011-ம் ஆண்டு வெளியான இந்த படத்தில் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் சர்ச்சையை கிளப்பியது.
Assassin's Creed வீடியோ கேம் கதாபாத்திரத்தை போன்ற காஸ்ட்யூமில் விஜய் இருக்கிறார் என்ற புகார் எழுந்தது.ஆனால், படத்தில் சிலநிமிடம் மட்டுமே வரும் காட்சி இது என்று கூறப்பட்டதை தொடர்ந்து இந்த சர்ச்சை முடிவுக்கு வந்தது.
படம் வெளியாகி கலவையான விமர்சனங்களைபெற்றது.அதன் பிறகு, மோகன் ராஜா இயக்கிய அனைத்து படங்களும் ஹிட் அடித்தன. தமிழ் சினிமாவில் முக்கியமான இயக்குனராக உருவெடுத்தார்.
இந்நிலையில், சமீபத்தில் ஊடகம்ஒன்றிற்கு பேட்டியளித்த அவரிடம் மீண்டும் விஜய்யை இயக்கம் திட்டம் உள்ளதா..? என்று கேட்டதற்கு, நிச்சயமாக விஜய்யை இயக்குவேன்.தனிஒருவன் இரண்டாம் பாகம் முடிந்த பிறகு விஜய்யை இயக்குவேன் என்று அதிரடியாக கூறியுள்ளார்.