இறப்பதற்கு முன் தோழிக்கு போன் செய்த சில்க் ஸ்மிதா.. மனவேதனையுடன் ரகசியத்தை உடைத்த நடிகை அனுராதா..!
80களில் நடிகை சில்க் ஸ்மிதா இடம் பெறும் பாடல்களே இல்லாத படங்கள் இல்லை என்று கூறலாம். என்பதுகளில் ரசிகர்களின் கனவு கன்னியாக திகழ்ந்தவர் நடிகை சில்க் ஸ்மிதா.
ரஜினி, கமல், விஜயகாந்த் போன்ற முன்னணி நடிகர்களுடன் நடிகையாகவும், குணச்சித்திர வேடங்களில் நடித்தும் தனக்கென்று ரசிகர் பட்டாளத்தை கொண்டிருந்தவர். நடிகர் வினுசக்கரவர்த்தியால், வண்டிச்சக்கரம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை சில்க்ஸ் ஸ்மிதா.
சினிமாவை ஒரு கலக்கு கலக்கிய நடிகை சில்க் ஸ்மிதா கடந்த 1996-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 23-ம் தேதி தற்கொலை செய்து கொண்டு இறந்து போனார்.90 களில் கோடி கோடியாக சம்பாதித்த சில்க் ஸ்மிதாவின் தற்கொலை பல காரணங்கள் சொல்லப்பட்டாலும் அரசியல் வாதிகளின் தொந்தரவு தான் என பிராதனமாக பேசப்பட்டது.
அவர் பெண் என்பதாலும், தனிமையில் இருந்ததாலும் பலரும் அவரை எளிதாக தொந்தரவு செய்தனர் எனகூறப்படுகிறது. சமீபத்தில், திருப்பதி ராஜன் என்ற இயக்குனர் சில்க் ஸ்மிதா இறப்பதற்கு பத்து நாட்கள் முன்பு கூட என்னிடம் பேசினார். வீட்டிற்கு வர சொன்னார். ஆனால், அவர் வீட்டுக்குள் என்னை செல்ல விடமால் நான்கைந்து குண்டர்கள் என்னை தடுத்தனர்.
படப்பிடிப்பு தளத்தில் சந்திக்க சென்றேன் ஆனால் அப்போதும் என்ன அந்த குண்டர்கள் தடுத்து விட்டனர். அப்போது சில்க் ஸ்மிதா என்னை பார்த்து கண் கலங்கினார். கோடி கோடியாக பணம் வைத்துள்ள ஒருவர் எதற்காக தற்கொலை செய்து கொள்ள வேண்டும் என்று கூறினார்.
இந்நிலையில், நடிகையும் சில்க் ஸ்மிதாவின் நெருங்கிய தோழியுமா நடிகை அனுராதா சமீபத்தில் ஒரு பேட்டியில் கூறிகையில், சில்க் ஸ்மிதா தற்கொலை செய்து கொண்ட நாள் இரவு என்னிடம் தொலைபேசியில் " உன்னிடம் பேசணும், வீட்டுக்கு வர முடியுமா..?" என்று கேட்டார்.
ஆனால், குழந்தையை பார்த்துகொள்ள வேண்டும் என்பதால் என்னால் வர முடியாது என மறுத்து விட்டேன். அடுத்த நாள் காலை அவர் தற்கொலை செய்துகொண்டார் என்ற தகவலை கேட்டதும் என தலையே இரண்டாக பிளந்து விட்டது போல இருந்தது. நான் மட்டும் அன்று இரவு அங்கு சென்றிருந்தால் இன்று சில்க் ஸ்மிதா நம்முடன் இருந்திருப்பார் என்று கூறியுள்ளார் அனுராதா.