அஜித்தால் சிவாவுக்கு கிடைத்த கவுரவம் - விஜய்யால் அட்லிக்கு கிடைக்க வில்லையே..? - ரசிகர்கள் ஷாக்
தமிழ் சினிமாவை பொறுத்தவரை தற்போது உச்சத்தில் இருக்கும் இயக்குனர்களில் இயக்குனர் அட்லிகுமாரும் ஒருவர். இவர் இயக்கத்தில் முதல் படமாக வெளிவந்த ராஜாராணி நல்ல வரவேற்ப்பை பெற்று ப்ளாக் பஸ்டர் ஹிட் அடித்தது.
அதனை தொடர்ந்து, விஜய்யுடன் தெறி, மெர்சல், பிகில் என அனைத்து படங்களும் ஹிட் தான். அப்படியிருக்க அட்லீ தற்போது ஷங்கர், முருகதாஸிற்கு பிறகு அதிக சம்பளம் வாங்கும் இயக்குனர்கள் லிஸ்டில் உள்ளனர்.
இவர் இயக்கத்தில் இந்த வருடம் வெளிவந்த பிகில் படம் சுமார் ரூ 180 கோடி பட்ஜெட்டில் உருவாகியுள்ளது, கண்டிப்பாக இவரின் சம்பளம் கோடிகள் இருக்கும்.
ஆனால், Forbes பத்திரிக்கை Top 100 இந்திய பிரபலங்கள் 2019 பட்டியலில் அஜித்தை வைத்து விஸ்வாசம் படத்தை இயக்கிய சிறுத்தை சிவா, ரஜினி-யை வைத்து பேட்ட படத்தை இயக்கிய கார்த்திக் சுப்புராஜ் இடம்பெற்றுள்ளனர்.
ஆனால், பிகில் படத்தை இயக்கிய அட்லீ இல்லாமல் போனது பலருக்கும்அதிர்ச்சியை கொடுத்துள்ளது.