பல வருட இடைவெளிக்கு பிறகு ரஜினியை சந்திக்கவுள்ள நடிகர் அஜித்..? - என்ன காரணம்..?


நடிகர் அஜித் தற்போது "வலிமை" படத்தின் படப்பிடிப்பில் பிசியாக உள்ளார். இயக்குனர் ஹெச்.வினோத் இயக்கும் இந்த படத்தில் நடிகர் அஜித் போலீஸ் அதிகாரியாக நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு ஆந்திராவில் உள்ள ராமோஜி ராவ் ஃப்லிம் சிட்டியில் நடைபெற்று வருகின்றது.

இந்நிலையில், நடிகர் ரஜினிகாந்த் நடிகர் அஜித்தின் பேவரைட் இயக்குனர் சிறுத்தை சிவாவுடன் கூட்டணி அமைத்து தலைவர் 168 படத்தில் நடிக்கவுள்ளார். இந்தபடத்திற்கான பூஜையும் போடப்பட்டுவிட்டது.

இந்தப் படத்தில் நடிகர் ரஜினிகாந்த் உடன் குஷ்பு, மீனா, கீர்த்தி சுரேஷ் நடிகர் சூரி, சதீஷ் உள்ளிட்டோரும் நடிக்கின்றனர். எந்திரன், பேட்ட படங்களைத் தொடர்ந்து இந்தப் படத்தையுன் சன் பிக்சர்ஸ் நிறுவனமே தயாரிக்கிறது. சிறுத்தை சிவாவுடன் விஸ்வாசம் படத்தில் இணைந்த டி.இமான் இந்தப் படத்திற்கும் இசையமைக்கிறார்.

இந்த படத்தின் படப்பிடிப்பும் அடுத்த வாரம் வலிமை படப்பிடிப்பு நடக்கும் ராமோஜி ராவ் ஃப்லிம் சிட்டியில் தான் நடக்கவுள்ளது. இதன் மூலம், பல வருட இடைவெளிக்கு பிறகு ரஜினியை நடிகர் அஜித் சந்திக்கும் சூழல் உருவாகியுள்ளது.

கடந்த, 2009-ம் ஆண்டு நடைபெற்ற அசல் படத்தின் பூஜை மற்றும் அதே ஆண்டில் நடைபெற்ற பாசத்தலைவனுக்கு பாராட்டு விழா ஆகிய நிகழ்ச்சிகளில் அஜித் - ரஜினி இருவரும் பங்கேற்றிருந்தனர் அதன் பிறகு இருவரும் சந்தித்து கொள்ளவே இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
Blogger இயக்குவது.