பிகிலும் இல்ல, பேட்ட-யும் இல்ல - தளபதி கோட்டையில் மாஸ் காட்டிய அஜித் - பிரபல திரையரங்கமே வெளியிட்ட தகவல்..!


ஒவ்வொரு வருடத்தின் முடிவிலும் அந்த வருடத்தின் டாப் 10 படங்கள் எது என பிரபல திரையங்குகள் ஒரு பட்டியலை வெளியிடுவது வழக்கம். அந்த வகையில், நடிகர் விஜய்யின் கோட்டை என்று அழைக்கப்படும் நெல்லை ராம் முத்துராம் சினிமாஸ் சற்று முன் ஒரு பட்டியலை வெளியிட்டுள்ளது. 

2019 இன்னும் சில தினங்களில் முடியவுள்ளது. இந்த வருடத்தில் வெளியான படங்களின் டாப் 10 பட்டியலை பல்வேறு திரையரங்கங்கள் வெளியிட்டு வருகின்றனர். அந்த வகையில் நெல்லையில் பிரபல திரையரங்கமான ராம் முத்துராம் சினிமா தியேட்டர் தற்போது டாப் 10 பட்டியலை வெளியிட்டுள்ளது. 

அதில் முதலிடத்தை விஸ்வாசம் படம் பிடித்துள்ளது. பிகில் இரண்டாம் இடமும், பேட்ட மூன்றாம் இடமும் பிடித்துள்ளன. பிகில் படம் சில பிரச்சனையால் தாமதாமாக தான் இந்த திரையரங்கில் ரிலீஸ் ஆனது என்பது குறிப்பிடத்தக்கது. 

அவர்கள் வெளியிட்ட TOP 10 Movies 2019 பட்டியல் இதோ,

1.விஸ்வாசம் 
2.பிகில் 
3.பேட்ட 
4.அசுரன் 
5.கைதி 
6.கோமாளி 
7.லயன் கிங் 
8.நம்ம வீட்டு பிள்ளை 
9.நேர்கொண்ட பார்வை 
10. காஞ்சனா 

மேலும், நல்ல வசூல் கொடுத்த திரைப்படங்கள் : தடம், காப்பான் 

அதிகப்படியான ஆன்லைன் டிக்கெட்டுகள் விற்பனையான படம் : அவென்ஜர்ஸ் எண்டு கேம்
Powered by Blogger.