இதனால் தான் மனைவியை விவாகரத்து செய்தேன் - முதன் முறையாக உண்மையை கூறிய விஷ்ணு விஷால்..!


கிரிக்கெட் வீரராக தனது வாழ்கை பயணத்தை தொடங்கிய நடிகர் விஷ்ணு விஷால் 2009ம் ஆண்டு வெண்ணிலா கபடி குழு படத்தில் நாயகனாக சினிமாவில் அறிமுகமானார். 

அதனை தொடர்ந்து பலே பாண்டியா, குள்ளநரி கூட்டம், நீர்ப்பறவை, முண்டாசுப்பட்டி, ஜீவா போன்ற படங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். 

கடந்த வருடம் அவரது நடிப்பில் வெளியான ராட்சசன் படத்தில் அவர் நடிக்க அப்படம் உலகம் முழுவதும் விருதுகள் பெற்று வருகிறது. 2011-ம் ஆண்டு தனது கல்லூரி தோழியான ரஜினியை காதலித்து திருமணம் செய்துகொண்டார். 

இந்த தம்பதிக்கு ஆர்யன் என்ற மகனும் உள்ளார். ஆனால், சமீபத்தில் இவர்கள் நடுவில் ஏற்பட்ட சில பிரச்சனைகள் காரணமாக தனது மனைவியை விவாகரத்து செய்துவிட்டதாக விஷ்ணு விஷால் தனது ட்விட்டரில் கூறியிருந்தார். 

இது குறித்து சமீபத்திய பேட்டியில் பேசிய விஷ்ணு விஷால், நான் படங்களுக்காக காதல் காட்சிகளில் நடிப்பது, நடிகைகளுடன் பழகுவது என இருந்தேன். ஒரு கட்டத்தில், இதுவே சந்தேகமாக மாறியது. இது எனக்கு மனஉழைச்சலை கொடுத்தது. இறுதியாக, என் திருமண வாழ்வு விவாகரத்தில் முடிந்து விட்டதாக அவர் கூறியுள்ளார்.
Powered by Blogger.