என்னோட தல, தளபதி, சூப்பர் ஸ்டார், உலகநாயகன் எல்லாம் இவர் தான் - வனிதா வெளியிட்ட புகைப்படம் - வாயடைத்து போன ரசிகர்கள்..!


நடிகை வனிதா விஜயகுமார், பிரபல நடிகர் விஜயகுமாரின் மகள். தனது அப்பா மூலம் சினிமாவில் அறிமுகமாகி தளபதி விஜய்யுடன் நாயகியாக ஒரு படத்தில் நடித்தவர் வனிதா. 

பின் அடுத்தடுத்து படங்கள் நடித்தாலும் குடும்பம் மற்றும் சூழ்நிலை காரணமாக சினிமாவில் அவ்வளவாக தாக்கு பிடிக்க முடியவில்லை. பின் திருமணம், விவாகரத்து, கோர்ட், கேஸ் என குடும்ப பிரச்சனையால் அவரது பெயர் அதிகம் அடிபட்டது. 

கடைசியாக அவர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள அதிகம் பேசப்பட்டார். இந்த நிலையில் முதன்முதலாக அவர் தனது மகனின் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். 

அதில் அவர், என்னுடைய தளபதி, சூப்பர் ஸ்டார். தல, உலக நாயகன் என்னுடைய எல்லாம், என்னுடைய வாழ்கையே என்னுடைய விஜய் ஸ்ரீஹரி தான் என பதிவு செய்துள்ளார்.

இதனை பார்த்த ரசிகர்கள் பலரும் வனிதாவிற்கு இவ்வளவு பெரிய மகன் இருக்கிறாரா..? என்று வாயடைத்து போயுள்ளனர்.
Powered by Blogger.