ஆனந்த கண்ணனுடன் நெருக்கமாக கிறிஸ்துமஸ் கொண்டாடிய காஜல் பசுபதி..! வைரலாகும் புகைப்படம் - நீங்களே பாருங்க..!


சினிமா பிரபலங்கள் அளவிற்கு ரேடியோ, டிவி நிகழ்ச்சி தொகுப்பாளர்களும் பிரபலமாகிவிட்டனர். இதற்கெல்லாம் முக்கிய காரணம் சமூக வலைத்தளங்கள். 

இந்த சமூக வலைத்தளங்கள், டெக்னாலஜி வளர்ச்சி இவை அனைத்தும் சாதாரண மனிதரைக்கூட பிரபலமாக மாற்றிவிடுகிறது. ஆனால், போதிய டெக்னாலஜி வளர்ச்சி இல்லாதா காலம், சமூக வலைத்தளங்கள் என்றால் என்னனு கூட தெரியாத காலத்திலையே மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவர் நிகழ்ச்சி தொகுப்பாளர் ஆனந்த கண்ணன். 

சன் டிவி, சன் மியூசிக் என இவரது நிகழ்ச்சிகள் அனைத்தும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இவர் ஒரு சிங்கப்பூர் வாழ் தமிழர். முதலில் ரேடியோ சிட்டியில் RJ வாக இருந்த இவர் சன் ம்யூசிக்கில் நடந்த ஆடிஷனில் கலந்துகொண்டு VJ வாக மாறினார். 

இவர் தொகுத்துவழங்கிய பல்வேறு நிகழ்ச்சிகள் மாபெரும் வெற்றிபெற்றது. அதன்பின்னர் சன் டிவியில் சிந்துபாத் என்ற குழந்தைகளை கவரும் நாடகத்தில் நடித்தார் ஆனந்த கண்ணன். இவர் நடித்த விக்ரமாதித்தன் தொடர் 90களில் பிறந்த குழந்தைகளின் பேவரட் நாடகம் ஆகும்.

அதன்பின்னர் ஒருசில படங்களில் ஹீரோவாகவும், ஒருசில படங்களில் துணை கதாபாத்திரத்திலும் நடித்தார் ஆனந்த கண்ணன். அதன்பின்னர் சரியான வாய்ப்புகள் அமையாததால் மீண்டும் சிங்கப்பூருக்குகே சென்று செட்டிலாகிவிட்டார். இவருக்கு திருமணமாகி ஒரு ஆண் மற்றும் ஒரு பெண் குழந்தை உள்ளது.


இந்நிலையில், பிரபல நடிகையும், பிக்பாஸ் சாண்டியின் முதல் மனைவியுமான காஜல் பசுபதி தற்போது ஆனந்த கண்ணனுடன் நெருக்கமாக கிருஸ்துமஸ் கொண்டாடிய புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது. இதனை, காஜல் பசுபதியே வெளியிட்டுள்ளார்.
Blogger இயக்குவது.