க்ளோபல் வார்மிங்கிற்கே நீங்க தான் காரணம் - நடிகை திஷா பதானியின் ஹாட் போஸ் - கவி எழுதும் ரசிகர்கள்


இந்தியில் வெளியான கிரிக்கெட் வீரர் தோனி வாழ்க்கை வரலாற்று படம் மூலம் பிரபலம் ஆனவர் திஷா பதானி. இவர் தனது காதலர் டைகர் ஷெராப்புடன் இணைந்து நடித்து கடைசியாக வெளியான "பாகி-2" படத்திற்கும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

தற்போது விளம்பர படங்களிலும் நடித்து வருகின்றார். சுந்தர்.சி இயக்க இருக்கும் பிரமாண்ட சரித்திர படமான "சங்கமித்ரா"வில் இருந்து சுருதிஹாசன் விலகிய பிறகு, அந்த பாத்திரத்தில் நடிக்க திஷா பதானி ஒப்பந்தம் ஆனார்.ஆனால், அந்த படம் என்ன ஆனது என்றே தெரியவில்லை.

திஷா பதானி அவ்வப்போது சமூக வலைதளங்களில் தனது கவர்ச்சி படங்களை வெளியிட்டு வருவது வழக்கம். 

அந்த வகையில், சமீபத்தில் அவர் வெளியிட்ட நீச்சல் உடை புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி உள்ளது. தற்போது, நைட் மோடில் பிகினி உடையில் படுகவர்ச்சியாக ஒரு படத்தை வெளியிட்டு உள்ளார்.


இதனை பார்த்த ரசிகர்கள் க்ளோபல் வார்மிங்கிற்கு காரணமே நீங்க தான் என்று அவரது அழகின் சூட்டை வர்ணித்து வருகிறார்கள்.
Blogger இயக்குவது.