தமிழ் சினிமாவில் நான் பட்ட கஷ்டங்கள் - நடிகை ஹனிரோஸ் பகீர் குற்றசாட்டு
தமிழ் சினிமாவில் கேரளா உள்ளிட்ட வெளிமாநிலங்களில் இருந்து வரும் நடிகைகள் தான் அதிகம் சாதித்து வருகின்றனர். இன்று லேடி சூப்பர் ஸ்டார் என்று கொண்டாடப்படும் நயன்தாராவே கேரளாவில் இருந்து தமிழசினிமாவுக்கு வந்தவர் தான்.
நிலைமை இப்படி இருக்க, தமிழ் சினிமா துறை மீது பிரபல மலையாள நடிகை ஹனி ரோஸ் பகீர் குற்றச்சாட்டு ஒன்றை வைத்துள்ளார்.
தமிழ் படங்களால் நான் அவ்வளவு கஷ்டங்களை அனுபவித்துள்ளேன். இது பெரிய படம் பயப்படாம நடிங்க என்று மேனேஜர் பேச்சை கேட்டு நடிப்பேன்.
ஆனால், பின்னர் தான் தெரியவரும் அந்த படத்தால் எந்த பயனும் இல்லை என்று. தமிழ் சினிமா துறையில் சிலர் என்னை மனரீதியாக துன்புறுத்தினார்கள் எனவும் ஹனி ரோஸ் கூறியுள்ளார்.