அஜித் நடித்ததில் உங்களுக்கு பிடித்த படம் எது.? - பாலிவுட் நடிகர் சல்மான் அதிரடி பதில்


உலகின், பல மொழிகளில் படங்கள் தமிழில் டப் செய்யப்பட்டு வெளியாவது வழக்கம். 

அப்படி வெளியாகும் போது படத்தில் நடித்த ஹீரோ அல்லது ஹீரோயின் படத்தின் ப்ரமோஷனுக்காக சென்னை மற்றும் தமிழ்நாட்டின் பிற பகுதிகளுக்கு விசிட் அடுத்து ப்ரோமோஷன் நிகழ்சிகளில் கலந்து கொள்வார்கள்.

அந்த வகையில், கடந்த வெள்ளிக்கிழமை டப் செய்யப்பட்டு வெளியான படம் தபங் 3. இப்படத்தை நடன இயக்குனர் பிரபுதேவா தான் இயக்கியுள்ளார். அண்மையில் படக்குழு சென்னை வந்து புரொமோஷன் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டனர். 

அப்போது, பேட்டியில் சல்மான் கானிடம், அஜித் புகைப்படத்தை காட்டி உங்களுக்கு பிடித்த அஜித்தின் திரைப்படம் எது என கேட்டனர். அதற்கு அவர் டொக் டொக் என்று கூறி வாலி சிறந்த படம் என்று கூறியுள்ளார். 

வாலி படத்த்தில் நடித்த அஜித் அடிக்கடி டொக் டொக்என சைகை செய்வார். அதனை அப்படியே செய்து காட்டியுள்ளார் சல்மான் கான்.
Powered by Blogger.