ஆசியாவின்Top 50 Sexiest Female பட்டியலில் இடம் பிடித்த ஒரே ஒரு தமிழ் நடிகை.! யாருன்னு தெரியுமா..?
பிரிட்டன் வார இதழ் நடத்திய கருத்து கணிப்பில், ஆசியாவிலேயே மிகவும் கவர்ச்சியான பெண்ணாக ஹிந்தி நடிகை ஆலியா பட் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
ஈஸ்டர்ன் அய் (Eastern eye) என்ற பிரபல பத்திரிகை ஆன்லைனில் கருத்து கணிப்பு நடத்தி, அதன் விவரத்தை வெளியிட்டுள்ளது. அதில் ஆலியா முதலிடத்திலும், தீபிகா படுகோன் 2ஆவது இடத்திலும், தொலைக்காட்சி நடிகை ஹினா கான் 3ஆவது இடத்திலும் உள்ளனர்.
இதேபோல் 5முதல் 10 வரையிலான இடங்களை இந்திய பெண்களே பிடித்துள்ளனர். அவர்களில் 6ஆவது இடத்தில் ஹிந்தி நடிகை கத்ரினா கைப், 10ஆவது இடத்தில் பிரியங்கா சோப்ராவும் உள்ளனர்.
இந்த பட்டியலில் ஒரே ஒரு தமிழ் நடிகை மட்டுமே இடம் பிடித்துள்ளார். கடந்த பத்து ஆண்டுகளுக்கு மேலாக தமிழ், தெலுங்கு என ரவுண்ட் கட்டி அடித்த நடிகை "அனுஷ்கா ஷெட்டி" தான் அந்த தமிழ் நடிகை. TOP 50 Sexiest Female in Asia என்ற பட்டியலில் 22-வது இடத்தை பிடித்துள்ளார் அனுஷ்கா.